திருமண சுற்றுலா

வெதுவெதுப்பான சன்னி கடற்கரைகள், பசுமையான வெப்பமண்டலக் காடுகள், பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை – என் வாழ்க்கையில் இவற்றை எல்லாம் “நான் செய்கிறேன்” என்று சொல்ல வைக்கும் சிறந்த மனப்பான்மையை வழங்குகிறது. இந்த மாநிலம் மலாய், சீன, இந்திய மற்றும் ஐரோப்பிய தாக்கங்கள் பலவற்றைக் கொண்டு, பன்முகக் கலாசார மரபுகளின் கலவையைப் பெருமையாகக் கொண்டுள்ளது. அதனால்தான் பினாங்கில் சமகாலத்திலிருந்து பாரம்பரியமான பெரனாகன், சீனம், மலாய் மற்றும் இந்திய கலாசார கருப்பொருளைக் கொண்ட பலவிதமான திருமணங்கள் நடைபெறுகின்றன. இவைகளுடன் இணைந்து, பினாங்கில் உள்ள வியப்பூட்டக்கூடிய, தனித்துவமான இடங்கள் நம் வாழ்நாளிலே மறக்கமுடியாத ஓர் அனுபவத்தை வழங்குகின்றன.

 

விவரங்களுக்கு www.penangweddingtourism.gov.my என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

திருமணத்திற்கு முன்பான (Prewedding) புகைப்படம் எடுத்தல்

பினாங்கின் உலகப் பழமை வாய்ந்த வசீகரம், பிரபலமான மரபு வாய்ந்த இடங்கள், பழங்கால மழைக்காடுகள், இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள், பிரகாசமான சுவரோவியங்கள் மற்றும் நிகரில்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதங்கள் ஆகியவை நம் மனதை சிறக்கடிக்கச் செய்யும். இந்த அழகிய இயற்கைக்காட்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காணும் போது அவை அழகான கனவு போன்று தோன்றும். மேலும், பினாங்கின் சிறிய அளவு மற்றும் நல்ல சாலை இணைப்புகள், மாநிலத்தின் பரபரப்பான யுனெஸ்கோ பாரம்பரிய தளமான ஜார்ஜ் டவுன் மற்றும் அமைதியான 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான மழைக்காடுகள், அதன் அழகிய கடற்கரைகள், வசீகரமான கிராமங்கள் மற்றும் அறியப்படாத இடங்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை சில நாட்களிலே புகைப்படக் கலைஞர்களால் படம்பிடிக்க முடிகிறது.