பினாங்கு குறித்த தகவல்கள்

மலேசியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பினாங்கு புகழ்பெற்ற சாலையோர உணவுகள், ‘யுனெஸ்கோ’ உலகப் பாரம்பரிய தளம், அழகிய வீதி ஓவியக் காட்சிகள், வருடந்தோறும் கொண்டாடப்படும் திருவிழாக்கள், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள், யுனெஸ்கோவால் சான்றளிக்கப்பட்ட அமேசான் காடுகளை விட 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான மழைக்காடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கலை, கலாசாரம், பாரம்பரியம், ஓவியங்கள், உணவு போன்றவற்றில் அதன் அற்புதமான பன்முகத்தன்மையுடன், அழகிய கடற்கரைகள், வியப்பில் ஆழ்த்தக்கூடிய மலைகளின் இயற்கையான சூழலுடன், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுப்பயணிகளை இந்த மாநிலம் ஈர்க்கிறது. மேலும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலகச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் பினாங்கு மாறியுள்ளது.

 

பினாங்கு மாநிலம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: தலைநகர் ஜார்ஜ் டவுன் அமைந்துள்ள பினாங்கு தீவு; & செபராங் பிறை என்று பெயரிடப்பட்ட தீபகற்பத்தில் உள்ள ஒரு நீண்ட குறுகிய நிலப்பகுதி. தீவின் வடகிழக்குப் பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஜார்ஜ்டவுன் நகரம் உள்ளது. பசுமையான நிலப்பரப்பின் பெரும்பகுதி தீவின் மலைப்பாங்கான மையத்தில் அமைந்துள்ளது, இந்தப் பகுதியே ‘பினாங்கு மலை யுனெஸ்கோ உயிர்க்கோளக் காப்பகம்’ & பிரதான நிலப்பகுதிக்குத் தாயகமாக உள்ளது. குறுகிய மணல் கடற்கரைகளில் தங்கும் விடுதிகளும் குடியிருப்புப் பகுதிகளும் வரிசையாக உள்ளன. இந்தக் கடற்கரையானது பத்து ஃபெரிங்கி, தஞ்சோங் பூங்கா, தஞ்சுங் தோக்கோங் ஆகிய இடங்கள் வரை பரவியுள்ளன. பினாங்கின் தென்மேற்கில் பாலிக் பூலாவ் என்ற ஓர் அழகிய கிராமப்புறம் உள்ளது. பினாங்கின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலம் அமைந்துள்ளது. அதன் செழிப்பான தொழில்துறை மையத்திற்காக ‘கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது. செபராங் பிறை (அல்லது ‘பிரதான நிலம்’, என்று பினாங்கில் அன்புடன் அழைக்கப்படுகிறது) இரண்டு பாலங்களின் மூலம் பினாங்கு தீவுடன் இணைக்கப்பட்டுள்ளது. செபெராங் பிறையில் உள்ள முக்கிய நகரம் பட்டர்வொர்த். அதைத் தொடர்ந்து புக்கிட் மெர்தாஜம், நிபோங் திபால் ஆகியவை முக்கிய நகரங்களாகும்.