மைஸ்

பினாங்கின் நவீனத்துவம் மற்றும் ஆசியப் பாரம்பரியங்களின் தனித்துவமான கலவை, நன்கு நிறுவப்பட்ட விருந்தோம்பல் துறையுடன் இணைந்து, அதை ஒரு பிரபலமான ‘மைஸ்’ (MICE) போன்ற ஓர் இடமாக அடையாளப்படுத்தியுள்ளது. வணிகம் சார்பாக வரும் பயணிகளுக்காக பினாங்கில் நவீன, அதிநவீன மாநாட்டு மையங்கள் உள்ளது, இதில் மிகப்பெரிய உள்ளரங்கங்கள், அதிகபட்சமாக 13,000 பேர் அமரக்கூடிய அடித்தள பினாங்கு சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (SPICE), மற்றும் 2,500 பேர் அமரக்கூடிய ஸ்ட்ரெய்ட்ஸ் கீ மாநாட்டு மையத்திலிருந்து (எஸ்.க்யூ.சி.சி) கடலின் இரம்மியமான காட்சிகளைக் காணலாம்.

 

பினாங்கு கடற்கரையோர மாநாட்டு மையம் (பி.டபிள்யூ.சி.சி) மற்றும் பினாங்கு உலக நகர (பி.டபிள்யூ.சி) மாநாட்டு மையம் ஆகியவை தீவின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைக்கப்பட உள்ளன.

 

வரலாற்றுக் கட்டிடங்கள், பிரபலமான அடையாள சின்னங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான இடங்களின் வகைகளும் பினாங்கில் உள்ளது, இந்த இடங்கள் அனைத்தும் ஒரு முழு நிறைவான நிகழ்வுக்கு மறக்கமுடியாத பின்திரைக் காட்சியை வழங்குகின்றன.