கல்விச் சுற்றுலா

கல்விச் சுற்றுலா

கல்விச் சுற்றுலா

2 நாட்கள் 2 இரவுகள்

நாள் 1

ஜார்ஜ் டவுனை நடந்து சுற்றிப்பார்த்தல்

வரலாறு நிறைந்த ஜார்ஜ் டவுன் உள் நகரத்தை சுற்றிப் பாருங்கள், அங்கு கடந்த கால வரலாற்றை அதன் பல்வேறு கட்டிடக்கலை, நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய வர்த்தகங்களின் மூலம் அறிந்து கொள்ளவும். சுற்றிப் பார்க்கும்போது உள்ள முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று ஹார்மனி தெருவில் நடந்து செல்வது ஆகும், அங்கு நீங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பழமையான வழிபாட்டு வீடுகளில் கிறிஸ்தவம், தாவோயிசம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சுற்றுலா தகவல் மையத்தை 04-263 1166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். சுற்றிப் பார்க்கும் நாளின் காலையிலேயே பதிவுகள் செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு வசதியாக உள்ள ஒரு சுற்றுலா நாளின் காலை 10.00 மணிக்குள் சுற்றுலா தகவல் மையத்தில் பதிவு செய்ய வேண்டும். முக்கிய அறிவிப்பு: கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் காலத்தில், ஏமாற்றத்தைத் தவிர்க்க, பயணத்தின் நிலையை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளவும்.

சியோங் ஃபேட் ட்சே மாளிகை*

ஜார்ஜ் டவுனின் மிகவும் போற்றத்தக்க கட்டிடக்கலையில் ஒன்றான ‘தி ப்ளூ மேன்ஷனின்’ கட்டிடக்கலை மற்றும் அதன் வரலாற்றில் ஆழ்ந்து விடுங்கள். இந்த மாளிகை எப்படி உருவானது, அதன் பாரம்பரியம் மற்றும் யாருடைய பார்வை இந்த பிரமாண்டமான வீட்டைக் கட்டி முடித்தவர் யார் என்பது பற்றிய விரிவான பார்வையை இந்தச் சுற்றுப்பயணம் வழங்குகிறது. வரவேற்பு அறை, புகழ்பெற்ற முற்றம் மற்றும் இரண்டாவது மாடியில் உள்ள அருங்காட்சியகக் கண்காட்சி ஆகியவற்றை சுற்றிப்பார்ப்பதற்கு மொத்தம் 45 நிமிடங்கள் எடுக்கும்.
செயல்பாட்டு நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் தினசரி கிடைக்கும்
காலை 11.00 மற்றும் மதியம் 2.00

ஆடியோ சுய வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் தினமும் கிடைக்கின்றன
காலை 11.00 – மாலை 6.00
(ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 12 விருந்தினர்கள், அவர்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்)

முகவரி

14, லெபு லெய்த், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-262 0006

மின்னஞ்சல்

reservations@cheongfatttzemansion.com

இணையத்தளம்

www.cheongfatttzemansion.com

பினாங்கு பெரனாகன் மாளிகை*

உள்ளூர் மலாய்க்காரர்கள் மற்றும் பின்னர் வந்த காலனித்துவ ஆங்கிலேயர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளைத் தழுவி, பெரனாகன்கள் ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையையும், உணவு மற்றும் மொழி போன்ற பழக்கவழக்கங்களையும் கலாச்சார தாக்கங்களையும் உருவாக்கினர், அவை இன்றும் பினாங்கில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. வழிகாட்டப்படும் பயணத்தில் செல்லும்போது, அது பெரனாகன் கலாச்சாரத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குகிறது.
செயல்பாட்டு நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 9.30 – மாலை 5.00 மணி

முகவரி

29, லெபு கெரஜா, ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-264 2929

மின்னஞ்சல்

rmhbaba@gmail.com

இணையத்தளம்

www.pinangperanakanmansion.com.my

ஹவுஸ் ஆஃப் யீப் சோர் ஈ*

ஜார்ஜ் டவுனின் ஹவுஸ் ஆஃப் யீப் சோர் ஈ என்பது ஒரு புலம்பெயர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான “யீப் சோர் ஈ” ஒரு வங்கியாளராக மாறியதன் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. சமூக வரலாற்று காட்சியகமானது திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை வழிகாட்டப்படும் சுற்றுப்பயணங்களை வழங்குகிறது.
செயல்பாட்டு நாட்கள்

செவ்வாய் – சனிக்கிழமை (கேலரி ஞாயிறு, திங்கள் மற்றும் மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் மூடப்படும்)

செயல்படும் நேரம்

காலை 10.00 – மாலை 5.00

முகவரி

4, லெபு பினாங்கு, ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-226 1997
+6016-456 8434 (Joanne)

மின்னஞ்சல்

joanne@malihom.com

இணையத்தளம்

www.houseyce.com

பினாங்கு ஹவுஸ் ஆஃப் மியூசிக்*

பினாங்கு ஹவுஸ் ஆஃப் மியூசிக்குக்கு சென்று பினாங்கின் வளமான மற்றும் பலவகைப்பட்ட கலாச்சார மற்றும் இசை மரபுகளில் ஆழ்ந்து மூழ்குங்கள். சீன ஓப்பரா, பல்வேறு இந்திய இசை வடிவங்கள், பங்சாவான் மற்றும் போரியா போன்ற கடந்த கால வெவ்வேறு இசை வடிவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இந்த அருங்காட்சியகம் மார்ச் 16 அன்று நிரந்தரமாக மூடப்படும்
முகவரி

L4-02, நிலை 4, ஐ.சி.டி டிஜிட்டல் மால், கோம்தார்

தொடர்பு எண்

+604-370 6675

மின்னஞ்சல்

info@penanghouseofmusic.com

இணையத்தளம்

www.penanghouseofmusic.com

நாள் 2

தெலுக் பஹாங் – பினாங்கு மலை

வெப்பமண்டல நறுமணத் திரவியத் தோட்டம்*

நறுமணப் பொருட்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஒரு பயணத்திற்கு செல்லுங்கள் மேலும் இவற்றைப் பற்றி நன்கறிந்த சுற்றுலா வழிகாட்டி உங்களை நிதானமான ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் சென்று, இயற்கை, மூலிகைகள், பூக்கள், வனவிலங்குகள் மற்றும் பினாங்கின் மையப் பாத்திரத்தைப் பற்றிய சில கதைகளைக் கூறுவார்! மாற்றாக, ஆடியோ சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வசதியான வேகத்தில் உலாவி அறிந்து கொள்ளுங்கள்.
செயல்பாட்டு நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 4.30 (திங்கள் – வியாழன்)
காலை 9.00 – மாலை 6.00 (வெள்ளி – ஞாயிறு)
மூடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் கடைசி சேர்க்கை

முகவரி

2, ஜலான் தெலுக் பஹாங், தெலுக் பஹாங்

தொடர்பு எண்

+6012-423 6797
+6019-491 8797

மின்னஞ்சல்

info@tropicalspicegarden.com

இணையத்தளம்

www.tropicalspicegarden.com

வெப்பமண்டலப் பழத்தோட்டம்*

வெப்பமண்டலப் பழத் தோட்டத்திற்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியடையுங்கள். மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு, கரீபியன் மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இன வகைப் பழங்களின் சேகரிப்புகளைக் காட்டும் இந்த சுற்றுப்பயணம், பல தகவல்கள் மற்றும் அற்புதமான அனுபவங்களை அனைத்து வயதினருக்குமான வழங்குகிறது.
செயல்பாட்டு நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 5.30

முகவரி

ஜலான் தெலுக் பஹாங், தெலுக் பஹாங்

தொடர்பு எண்

+6012-497 1931

மின்னஞ்சல்

counter@tropicalfruitfarm.com.my

இணையத்தளம்

www.tropicalfruitfarm.com.my

பினாங்கு மலையின் இயற்கை நடைப்பாதைகள்/ பாரம்பரிய நடைப்பயணங்கள்*

தனிநபர்கள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கென்று உள்ள பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகள் மற்றும் இளைப்பாறும் செயல்பாடுகளை கண்டறியுங்கள். இயற்கை நடைப்பாதைகள் & பாரம்பரிய நடைப்பயணங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்குப் பிரமிக்க வைக்கும் காட்சிகள், செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்ட மழைக்காடு இயற்கை அழகு மற்றும் வினோதமான காலனித்துவ பாணியைக் கொண்ட பங்களாக்களை இரசிக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.
முகவரி

பினாங்கு மலை

தொடர்பு எண்

+6016-420 1189

மின்னஞ்சல்

naturewalkspenhill@gmail.com

இணையத்தளம்

www.facebook.com/NatureWalksPgHill

பினாங்கு மலையை இரவில் காணுதல்*

பினாங்கு மலையின் மழைக்காடுகளின் இரவு நேர அதிசயங்களைக் காண இது ஒரு வாழ்நாள் வாய்ப்பு. பல விலங்குகள், குறிப்பாக பூச்சிகள், நீர்வீழ்ச்சிகள், ஊர்வன ஆகியவை பகலில் வேட்டையாடுபவர்களிடமிருந்து மறைந்து கொள்கின்றன. அதாவது இரவில் மட்டுமே வெளிவரும் அழகான தவளைகள், கூச்ச சுபாவமுள்ள பாம்புகள் மற்றும் பிற மழைக்காட்டில் வாழும் உயிரினங்களைக் கண்டறிய இரவு நேரமே சிறந்த நேரம். நீங்கள் என்ன மாதிரியான அதிசய உயிரினத்தைக் காணப்போகிறீர்கள் என்று உங்களால் யூகிக்கவே முடியாது!
முகவரி

பினாங்கு மலை

தொடர்பு எண்

+6016-420 1189

மின்னஞ்சல்

naturewalkspenhill@gmail.com

இணையத்தளம்

www.penanghill.gov.my

* சுற்றுலாத்தளமானது வெவ்வேறு நேரங்களில் உள்நாட்டில் சுற்றுலாக்களை வழங்குகிறது. சுற்றுப்பயண அட்டவணையை சரிபார்த்து உங்கள் ஸ்லாட்டை முன்பதிவு செய்ய முன்னதாகவே ஃபோன் செய்யுங்கள்.
Share On: