சாலையோர ஹலால் உணவுகளுக்கான பாதை

சாலையோர ஹலால் உணவுகளுக்கான பாதை

சாலையோர ஹலால் உணவுகளுக்கான பாதை

3 நாட்கள் 2 இரவுகள்

கண்ணோட்டம்

 

நாள் 1

 

நாள் 2

 

நாள் 3

நாள் 1

ஜார்ஜ் டவுனிலிருந்து அயர் இத்தாம்

காலை உணவு

அலி நசி லெமாக் வாழை இலையில் கிடைக்கும் நசி லெமாக், ஜார்ஜ் டவுன்

ஸ்ரீ வெல்ட் ஃபுட் கோர்ட்டின் நுழைவாயிலில் அமைந்துள்ள கடையில் கிடைக்கும் நசி லெமாக்கானது பிரமிடு வடிவத்தில் வாழை இலைகளில் சுற்றப்பட்டு மிகச் சூடாக பரிமாறப்படுவதன் காரணமாக அலுவலக ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இது பிரபலமாக இருக்கின்றது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – சனிக்கிழமை
(ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 7 மணி – பிற்பகல் 3 மணி வரை

முகவரி

ஸ்ரீ வெல்ட் ஃபுட் கோர்ட், லெபு பண்டாய், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6016-407 0717

காலை உணவுக்குப் பிந்தைய உணவு

ஜார்ஜ் டவுன், லெபு பசார், மைடின் புபர் ககாங்

இங்கு கிடைக்கும் புபுர் கச்சாங்கிற்கு சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் ஒரு வளமான வரலாறு உள்ளது. புபுர் கச்சாங் என்பது இந்திய பாணி இனிப்பு வகை. சுக்கு மல்லி காபி என்பது 11 மூலிகைகள் சிறிது காபியுடன் கலக்கப்படும் ஓர் இந்திய மூலிகை பானம், உங்கள் உணவை நிறைவு செய்தவுடன் இதை அருந்தவும். கட்டாயமாகச் சுவைத்துப் பார்க்க வேண்டிய பானம்.
Operation Days

சனிக்கிழமை – வியாழன்
(வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 11 மணி – இரவு 7 மணி

முகவரி

52, லெபு பசார், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6016-487 0030

மதிய உணவு

ஜார்ஜ் டவுனில் உள்ள முத்து பனானா லீஃப்-இல் கிடைக்கும் வாழை இலை சாப்பாடு

லெபு அச்சினில் அமைந்துள்ள இந்த ஹலால் சான்றளிக்கப்பட்ட வாழை இலை உணவகம் வாழை இலை சாப்பாட்டுப் பிரியர்களுக்குச் சிறந்த தேர்வாகும். ரசம் (மசாலா சேர்க்கப்பட்ட சூப்) மற்றும் ஆடு அல்லது கோழி வறுவல் (காரமான, உலர்ந்த வறுத்த கோழி) ஆகியவை கண்டிப்பாகச் சேர்த்து சாப்பிட வேண்டிய பக்க உணவுகள்.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 07.30 மணி – மாலை 4.00 மணி வரை

முகவரி

153, லெபு ஆச்சே, ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6012-431 5317

தேநீர்

ஹமீத் பட்டா மீ சொட்டொங், ஜார்ஜ் டவுன்

ஹமீத் பட்டா மீ சொட்டொங்: ஃபோர்ட் கார்ன்வாலிஸுக்கு அடுத்துள்ள கோட்டா செலேரா ஃபுட் கோர்ட்டில் அமைந்துள்ள ஹமீத் பட்டா மீ சொட்டொங்கில் வரிசையில் நின்று வாங்குவதற்கு தகுதியான, காரமான இந்திய முஸ்லீம் நூடுல்ஸ் உணவிற்காக அலுவலக ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இரவும் பகலும் வரிசையில் நிற்கிறார்கள். இந்தக் கடை மீ கோரெங் மற்றும் மீ ரெபஸ் வகை உணவிற்காக விரும்பப்படுகிறது, இரண்டிலும் ஒரு காரமான சம்பல் சொட்டாங், நல்ல நறுமணத்திற்காக வறுத்த வெங்காயம், ஸ்பிரிங் வெங்காயம் மற்றும் ஒரு துண்டு எலுமிச்சம்பழத்துடன் சேர்த்துப் பரிமாறப்படுகிறது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை
(ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 11.30 – இரவு 8.00 (திங்கள் – வியாழன், சனி)
காலை 11.30 – மதியம் 1.00 / மதியம் 2.30 – இரவு 8.00 (வெள்ளிக்கிழமை)

முகவரி

கார்ன்வாலிஸ் கோட்டைக்கு அடுத்துள்ள படாங் கோட்டா லாமா (எஸ்பிளனேடு).

தொடர்பு எண்

+6013-431 9384

இரவு உணவு

நசி கண்டார் கம்புங் மலாயுவில் உள்ள நசி கண்டார், அயர் இத்தாம்

நீங்கள் இன்னும் இதை உணரவில்லை என்றால், குழம்பும், சாதமும்தான் பினாங்கின் முக்கிய உணவுகள். குழம்புகளின் நிலைத்தன்மை அடர்த்தியாகவோ அல்லது நீர் போன்றோ இருக்கலாம், மேலும் மணம் நிரம்பியிருக்கலாம். “குவா சம்பூர்” என்று கேட்டு அனைத்து குழம்பு மாதிரியையும் கேட்டுப் பெற முயலவும், அதாவது உங்கள் சாதத்தின் மேல் அனைத்துக் குழம்புகளின் கலவைகளையும் சேர்க்கவும்.
ஆபரேஷன் நாட்கள்

திங்கள் – ஞாயிறு (திங்கள் மதியம் மூடப்படும்)

செயல்பாட்டு நேரம்

காலை 6.30 – மதியம் 1.30
மாலை 4.30 – இரவு 10.00 மணி

முகவரி

A-29, ஜாலான் கம்புங் மேலாயு, கம்புங் மேலாயு

தொடர்பு கொள்ளவும்

+6012-583 9771
+6010-450 3434

இணையதளம்

www.facebook.com/Nasikandarkgmelayu

இரவுச் சிற்றுண்டி

வறுத்த & பிப்பா வாத்து சாதம், அயர் இத்தாம்

மாநிலத்தின் ஒரே ஹலால் பிப்பா வாத்து சாத விற்பனையாளராகக் கருதப்படும் வான் ஹக்கிமி (அவரது சீன முஸ்லீம் மாமாவிடமிருந்து செய்முறையைக் கற்றுக்கொண்டவர்) 2020 இல் அயர் இத்தாமில் தனது கடையைத் திறந்தார். அங்கு ஹலால்-உணவு வழங்குவதன் மூலம் உணவுப் பிரியர்களை ஈர்த்து வருகிறார். ஹக்கிமியின் பிப்பா சாத வாத்து செட் சுவையான குழம்பு மற்றும் சாய் பியூஇ (கடுகு கீரை ஸ்டூ) உடன் பரிமாறப்படுகிறது.
செயல்படும் நாட்கள்

வியாழக்கிழமை – செவ்வாய்க்கிழமை
(புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

மதியம் 12.30 – இரவு 9.00 மணி வரை

முகவரி

33A, ஜாலான் தியான் டீக், கம்புங் மேலாயு

தொடர்பு எண்

+6018-917 2822

மின்னஞ்சல்

w.hakimi2299@gmail.com

இணையதளம்

நாள் 2

கெலுகோர், பாலிக் புலாவ், பயன் லெப்பாஸ்

காலை உணவு

அஸ்தகா தமன் துன் சர்டோனில் கிடைக்கும் நசி லெமுனி, கெலுகோர்

நசி லெமுனி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று வெளியூர்காரர்களிடம் கேட்டால், “இல்லை” என்பதே பதிலாகக் கிடைக்கும். இந்தத் தனித்தன்மை வாய்ந்த வடநாட்டு அரிசி உணவு டௌன் லெமுனி (விட்டெக்ஸ் ட்ரைஃபோலியா) உடன் சமைக்கப்படுகிறது மற்றும் பெரும்பாலும் சம்பல், வறுத்த நெத்திலி, வறுக்கப்பட்ட வேர்க்கடலை, வேகவைத்த முட்டை மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றுடன் சேர்த்துப் பரிமாறப்படும்.
வேலை நேரம்

காலை 7.30 மணி– மதியம் 12.30 மணி வரை

முகவரி

அஸ்தகா தமன் துன் சர்டோன், தமன் துன் சர்டோன், கெலுகோர்

காலை உணவுக்கு பிந்தைய உணவு

பாலிக் புலாவில் உள்ள கெராய் ரொட்டி சனாய் அபாவில் கிடைக்கும் ரொட்டி சனாய் சராங் புருங்

பசிக்கின்றதா? கெராய் ரொட்டி கனாய் அபாவில் உள்ள ரொட்டி சனாய் சராங் புருங்கை சுவைத்துப் பார்க்கவும். இந்த எளிய கடை தனித்துவமான ரொட்டி சனாயினை வழங்குகிறது, இதில் முட்டை மற்றும் கைமாவாக அரைக்கப்பட்ட இறைச்சி ரொட்டி சனாயின் காலியாக உள்ள மையப்பகுதியில் நிரப்பப்படுகிறது.
செயல்படும் நாட்கள்

செவ்வாய் – ஞாயிறு (திங்கட்கிழமை மூடப்படும்)

செயல்படும் நேரம்

காலை 7 மணி– காலை 11 மணி வரை

தொடர்பு கொள்ளவும்

+6018-947 5083 (தௌபிக்)

முகவரி

புசாட் இன்குபேட்டர் கிராஃப், ஜலான் சுங்கை ரூசா, பாலிக் புலாவ்

மதிய உணவு

பாலிக் புலாவில் உள்ள மக் ங்கா குலாய் வாரிசனில் கிடைக்கும் நசி சம்பூர்

இந்த உணவகம் பல வகையான மலாய் உணவுகளுக்குப் பெயர் பெற்றது. கூடுதல் சுவை விரும்புபவர்கள் குலாய் அயாம், மீன் தலைக் கறி மற்றும் மாட்டிறைச்சி ரெண்டாங் ஆகியவற்றைக் கலந்து கொள்ளலாம்.
செயல்பாட்டு நாட்கள்

திங்கள் – சனி (ஞாயிறு மூடப்படும்)

வேலை நேரம்

காலை 10 மணி– மாலை 3 மணி வரை

முகவரி

ஜலான் சுங்கை நிப்பா, கம்புங் பெர்மாட்டாங் தெங்கா, பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+6019-498 3655

தேநீர்

லக்சா ஜங்குஸ் காக் திமா, பாலிக் புலாவ்

பாலிக் புலாவ்வை இருப்பிடமாகக் கொண்டு, லக்சா ஜங்குஸ், போகோக் ஜங்குஸ் அல்லது முந்திரி மரத்தின் நிழலில் மலாய் பாணியில் அசாம் லக்சாவை பரிமாறத் தொடங்கியது. தனித்துவமான புளியின்-புளிப்பு சுவை கொண்ட சீன பாணியான அசாம் லக்சாவிற்கு மாறாக, லக்சா ஜங்குஸ் சுவையில் மென்மையானது, ஏனெனில் அதில் நெடி வீசும் ஹே கோ அல்லது இறால் பேஸ்ட் சேர்க்கப்படவில்லை.
செயல்படும் நாட்கள்

வியாழக்கிழமை – செவ்வாய்க்கிழமை
(புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

மாலை 3.30 மணி– இரவு 8.00 மணி வரை

முகவரி

ஜலான் பாரு, கம்புங் பெர்லிஸ், பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+6019-566 7061

இரவு உணவு

அசல் பினாங்கு கயு நசி கண்டார், புக்கிட் ஜம்புல்

அசலான ‘பினாங்கு காயு நாசி கந்தர்’ கடை பல தசாப்தங்களாக அதன் இருப்பைக் கொண்டு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ளது. நீங்கள் இங்கு வரும்போது, நசி கண்டாரைச் சுவைக்கவும். இது பொதுவாக குறைந்தது இரண்டு வகை குழம்புகள் ஊற்றிக் கொடுக்கப்படும் சாதம், வறுத்த கோழி, மீன், ஆட்டிறைச்சி, கடல் உணவு அல்லது காய்கறிகளுடன் சேர்த்துப் பரிமாறப்படுகிறது.
செயல்படும் நேரம்

திங்கள் – ஞாயிறு
(24 மணி நேரம்)

முகவரி

எண் 15, லெபு நிப்பா, புக்கிட் ஜம்புல்

இணையத்தளம்

www.originalkayu.com.my

தொடர்பு கொள்ளவும்

+6012-555 8475

இரவு சிற்றுண்டி

பயன் லெப்பாஸில் உள்ள ப்ளூ பேயூ ஃபுட் கோர்ட்டில் கிடைக்கும் ரம்லி சாட்டே

பாம்புக் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள இந்த ஃபுட் கோர்ட்டில் கிடைக்கும் சட்டே உங்கள் சுவை அரும்புகளைப் பாட வைக்கும். சிறப்பான மேரினேட்டில் நன்றாக ஊறவைக்கப்பட்டு, பளபளப்பாக இருக்கும் அளவிற்கு கிரில் செய்யப்படுகிறது, இங்கு கிடைக்கும் சட்டே மிகவும் நன்றாகவும், சாற்றுடனும் இருக்கும், நீங்கள் மீண்டும் சாப்பிட விரும்புவீர்கள்.
இந்த ஸ்டால் ஈட் & ஷாப் கோப்பகத்தில் சேர்க்கப்படவில்லை
செயல்படும் நேரம்

காலை 7.30 முதல் 11.30 மணி வரை

முகவரி

140, ஜலான் டோகாங் உலர், பயன் லெப்பாஸ்

தொடர்பு எண்

+6010-843 8428

நாள் 3

பட்டர்வொர்த், கெப்பாலா பட்டாஸ், புக்கிட் மெர்தாஜாம்

காலை உணவு

பட்டர்வொர்த்தில் உள்ள நசி கண்டார் ஜெட்டியில் உள்ள நசி கண்டார்

உங்களுக்கு நசி கண்டார் சாப்பிட வேண்டும் போல உள்ளதா, நசி கண்டார் ஜெட்டிக்குச் செல்லுங்கள். இந்த உணவகம் பட்டர்வொர்த்தில் மிகவும் பிரபலமான நசி கண்டார் உணவுக் கடைகளில் ஒன்றாகும். ஒரு தட்டில் வேகவைத்த சாதத்தை எடுத்து, அதனுடன் மீன் தலைக் கறி, கோழிக் கறி, காய்கறிகள் மற்றும் பலவற்றைச் சேர்க்கவும்.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 6.30 மணி– மதியம் 3 மணி வரை

முகவரி

4784, ஜலான் பாண்டாய், பட்டர்வொர்த்

தொடர்பு எண்

+6017-462 0846

இணையதளம்

www.facebook.com/nasikandarjeti

காலை உணவுக்கு பிந்தைய உணவு

பட்டர்வொர்த்தில் உள்ள மீ பாண்டுங் ரெஸ்டோரனில் கிடைக்கும் மீ பாண்டுங் நூர்

தெற்கிலிருந்து வந்தாலும், இங்கு கிடைக்கும் நூடுல்ஸ், உள்ளூர் சுவை சேர்க்கப்பட்டு முட்டை நூடுல் மற்றும் காரமான இறால் சூப்புடன் சேர்த்து வழங்கப்படுகிறது. நீங்கள் இதை அதிகமாக விரும்புவீர்கள், இது ப்ரன்ச்சிற்கான சரியான உணவாகும்.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 11:30 மணி– இரவு 7 மணி வரை

முகவரி

6720, ஜலான் கம்புங் கஜா, கம்புங் கஜா, 12000 பட்டர்வொர்த்

தொடர்பு கொள்ளவும்

+6016-498 0832

மதிய உணவு

கெப்பாலா பட்டாஸில் உள்ள பாக் தின் இக்கான் பக்காரில் கிடைக்கும் இக்கான் பக்கார்

பலர் பாக் தின் இக்கான் பக்காரைப் பற்றி கதைகதையாகப் பேசியுள்ளார்கள், அது ஒரு நல்ல காரணத்திற்காக: சந்தேகத்திற்கு இடமின்றி பினாங்கில் நீங்கள் காணக்கூடிய சிறந்த இக்கான் பக்கார் கடையாகும். சிறிது சுவைத்து பாருங்கள், பின்பு உங்களுக்கே தெரியும்.
செயல்படும் நாட்கள்

சனிக்கிழமை – புதன்
(வியாழக்கிழமை & வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 11 மணி- மாலை 4 மணி வரை

தொடர்பு கொள்ளவும்

+604-575 8602

முகவரி

6735, ஜலான் பட்டர்வொர்த், கம்புங் பெர்மாட்டாங் மங்கிஸ், கெப்பாலா பட்டாஸ்

தேநீர்

ஷாஹுல் ஹமீத் உணவகத்தில் கிடைக்கும் சுசுர் உடாங், கெப்பாலா பட்டாஸ்

கெப்பாலா பட்டாஸில் மிகவும் விரும்பப்படும் ஒரு இதமான உணவு, தீவிலே இந்த உணவகம் சிறந்த சுசுர் உடாங் (எண்ணெயில் பொறிக்கப்பட்ட வறுத்த இறால் மற்றும் மூளை கட்டிய பீன்ஸ் பஜ்ஜி) உணவை வழங்குகிறது. சுசூர் உடாங்கின் தன்மை வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும். இங்கு பரிமாறப்படும் சுசூர் உடாங் வறுத்த டோஃபு மற்றும் வேர்க்கடலை கிரேவி குழம்புடன் பரிமாறப்படுகிறது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 8.00 மணி – இரவு 9.30 மணி வரை

தொடர்பு கொள்ளவும்

+6012-454 0546

முகவரி

45, ஜலான் பட்டர்வொர்த், கெப்பாலா பட்டாஸ்

இரவு உணவு

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள வருங் பக்சு மீ உடாங்கில் கிடைக்கும் மீ உடாங்

இரவு உணவுக்கான நேரம்! மீ உடாங்கை சாப்பிட விரும்புபவர்களுக்கு வருங் பக்சு மீ உடாங் பிடித்த இடமாக இருக்கும். இந்த எளிமையான உணவகம், அருகிலுள்ள மீனவ கிராமங்களில் இருந்து பெறப்படும் ஃபிரெஷ் மீன்களில் செய்த மீ உடாங்கை வழங்குகிறது. நல்ல மணத்திற்காக ஒவ்வொரு கிண்ணமும் வறுத்த வெங்காயம், ஸ்பிரிங் வெங்காயம் மற்றும் ஒரு துண்டு கலமன்சி (எலுமிச்சை) ஆகியவை கொண்ட அலங்காரத்துடன் பரிமாறப்படுகின்றன.
செயல்படும் நாட்கள்

வெள்ளிக்கிழமை – புதன்க்கிழமை
(வியாழக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

மதியம் 12:30 – இரவு 7.30 மணி வரை

முகவரி

385, MK 12, பகன் நியுர் ஜூரு, புக்கிட் மெர்தாஜாம்

தொடர்பு எண்

+6012-409 0771

இரவுச் சிற்றுண்டி

புக்கிட் மெர்தாஜாமில் கிடைக்கும் கீ ஷார் கோய் தியோவ்,

இன்னும் பசிக்கிறதா? மனம் விரும்பும் இந்த நூடுல்ஸை சாப்பிட கீ ஷார் கோய் தியோவுக்குச் செல்லவும். இந்த உணவகத்தில் வழங்கப்படும் ஷார் கோய் தியோவின் கிரேவி வகையை வழங்குகிறது. இது கெட்டியான இறால் ஸ்டாக் மூலம் செய்யப்படுகிறது. இந்த நூடுல் டிஷ் சூடாகவும், பச்சை ஊறுகாய் மிளகாயுடன் சாப்பிடவும் சிறந்தது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

மாலை 6.30 – அதிகாலை 1.30 மணி வரை

முகவரி

4964, ஜலான் பெர்மாடாங் ரவா, 14000 புக்கிட் மெர்தாஜாம்

தொடர்பு எண்

+6017-413 6793

மின்னஞ்சல்

keysevent@gmail.com

Share On: