ஜார்ஜ் டவுன் கலாச்சாரம் & பாரம்பரிய பாதை

ஜார்ஜ் டவுன் கலாச்சாரம் & பாரம்பரிய பாதை

ஜார்ஜ் டவுன் கலாச்சாரம் & பாரம்பரிய பாதை

கோம்தாரில் பார்க்க வேண்டியவை

ஸ்ட்ரீட் ஆஃப் ஹார்மனி (செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், கருணை தேவி கோயில், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கபித்தன் கெலிங் மசூதி)

காலையில் ஸ்ட்ரீட் ஆஃப் ஹார்மனியில் உலாவும் வேளையில், கிறிஸ்தவம், தாவோயிசம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் ஆகிய நான்கு வெவ்வேறு மதங்களின் தாக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயம், தென்கிழக்கு ஆசியாவின் ஆரம்பகால ஆங்கிலிக்கன் தேவாலயமாகும், இது குளிர்ச்சியான வெளிர் நீல உட்புற பளிங்குத் தரையைக் கொண்டுள்ளது. அதன் பசுமையான, அழகாக அழகுபடுத்தப்பட்ட மைதானம் ஒரு நேர்த்தியான விக்டோரியன் பாணி மண்டபத்தைச் சுற்றி உள்ளது.
சிறிது தொலைவில் 1728 இல் கட்டப்பட்ட மற்றும் பினாங்கின் மிகப் பழமையான தாவோயிஸ்ட் கருணை தேவி கோவில் உள்ளது. நீங்கள் இங்கே ஓர் அதிர்ஷ்டக் குச்சி பிரார்த்தனையைப் படிக்கலாம். அங்கிருந்து பினாங்கில் உள்ள மிகப் பழமையான இந்துக் கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வெகு தொலைவில் இல்லை – 1833 இல் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் பிரதான நுழைவாயில் மற்றும் முகப்பில் இந்துக் கடவுள்கள் மற்றும் தேவிகளின் சிற்பங்கள் உள்ளன. ஒரு மூலையில் திரும்பினால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய-முஸ்லிம் வர்த்தகர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித் கபித்தன் கெலிங் என்ற மசூதியைக் காணலாம். உங்களுக்காக வழங்கப்படும் மேலாடைகளை நீங்கள் அணிய வேண்டும். இந்த நான்கு வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி இலவசம்.
முகவரி

ஜலான் மஸ்ஜித் கபித்தன் கெலிங்

பினாங்கு பெரனாகன் மாளிகை

பாபா-ந்யோன்யா என்று பிரபலமாக அறியப்படும், வசதியான புலம்பெயர்ந்த சீன வீட்டிற்குள் நுழையுங்கள். பாபா-ந்யோன்யாவின் ஆடம்பரமான வாழ்க்கை முறை, பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்க இந்த மாளிகையில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பழங்காலத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் மற்றும் சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாளிகையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமிக்கத் தயாராக இருங்கள்.
செயல்படும் நாட்கள்

தினமும் திறந்திருக்கும்

செயல்படும் நேரம்

காலை 9.30 மணி- மாலை 5 மணி வரை

முகவரி

29, லெபு கெரஜா, ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-264 2929

மின்னஞ்சல்

rmhbaba@gmail.com

இணையத்தளம்

www.pinangperanakanmansion.com.my

கூ கோங்சி

சீனர்களின் குல தெய்வக் கோவிலின் புதிரான மற்றும் மிகவும் விரிவான கட்டிடக்கலையைக் கண்டு ஆச்சரியப்படுங்கள். ‘கூ’ குலத்தின் செழிப்பு மற்றும் சிறப்பின் உச்சத்தில் 1906 ஆம் ஆண்டில் குல தெய்வக் கோயில் கட்டப்பட்டது. கூ கோங்சி வளாகத்தில் ஒரு கூட்ட அரங்கம், அலுவலகங்கள், ஒரு ஓப்ரா மேடை, 62 மாடி வீடுகள் மற்றும் கடைவீடுகளுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம் உள்ளது. கூ கோங்சியின் மையக் கட்டிடமான லியோங் சான் தாங் வழியாக இந்த இடங்களுக்கு செல்லலாம், கூ கோங்சியில் ஒரு சிறிய அருங்காட்சியகம் உள்ளது, அங்கு கூ பரம்பரையின் தலைமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 9 மணி– மாலை 5 மணி வரை

முகவரி

18, கேனான் ஸ்கொயர், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-261 4609
+604-264 2119 (ticketing)

மின்னஞ்சல்

khookongsi@gmail.com

இணையத்தளம்

www.khookongsi.com.my

“நாற்காலியின் மீது ஒரு சிறுவன்” வீதி ஓவியம்

‘நாற்காலியின் மீது ஒரு சிறுவன்’ வீதி ஓவியத்துடன் ஒரு புகைப்படம் எடுங்கள். ‘ஜார்ஜ் டவுன் திருவிழா 2012’ உடன் இணைந்து, ஒரு லிதுவேனியன் கலைஞரான எர்னஸ்ட் சக்கரெவிக் என்பவரால் இந்தச் சுவரோவியம் வரையப்பட்டது. சுவரில் உள்ள மிக உயரமான ஓட்டையை அடைவதற்காக நாற்காலியில் ஒரு சிறுவன் அவனுடைய கால்விரலில் நிற்கும் காட்சி இது.
முகவரி

லெபு கேனான், ஜார்ஜ் டவுன்

சீயா கோங்சி

பினாங்கின் ஆரம்பகால பாரம்பரிய வீட்டைச் சுற்றிப் பார்க்கவும். இது கூ கோங்சியிலிருந்து ஒரு கட்டிடம் தள்ளி அமைந்துள்ளது. இங்கு சீனாவின் அடையாளச் சின்னங்களான பிரமாண்ட கோவில்கள் மற்றும் அரண்மனைகள் உள்ளது. இந்தக் கட்டிடத்தின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு மலேசிய, பாரம்பரிய புலம்பெயர்ந்த சீனர்கள் மற்றும் ஐரோப்பிய மோட்டிஃப் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 5.00 (கடைசி சேர்க்கை மாலை 4.30)

முகவரி

8, லெபு ஆர்மேனியன், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-261 3837

மின்னஞ்சல்

admin@cheahkongsi.org.my

இணையத்தளம்

www.facebook.com/CheahKongsi

“பூனையும், மனிதனும் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழும் காட்சி” வீதி ஓவியம்

‘101 தொலைந்து போன பூனைக்குட்டிகள்’ திட்டத்திற்காக, ‘ஜார்ஜ் டவுன் திருவிழா 2013’ உடன் இணைந்து, தெரு விலங்குகளுக்காகப் பணிபுரியும் கலைஞர்கள் (ASA) அமைப்புடன் பணிபுரியும் கலைஞரான டாங் யோக் காங் வரைந்த ‘ஆர்வம் கொண்ட பூனை ஊர்வலத்துடன் செல்ஃபி எடுங்கள்’. இந்தச் சுவரோவியம் விலங்குகளின் மீது காட்டப்பட வேண்டிய இரக்க உணர்வை வலியுறுத்துகிறது. தாவோயிஸ்ட் ஊர்வலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக வரையப்பட்ட பூனைகளின் பிரதிநிதித்துவமானது, மற்றவர் வடிவங்களில் இருப்பது என்ன வகையான உணர்வை அளிக்கின்றது என்பதைக் குறிக்கிறது.
முகவரி

லெபு ஆர்மேனியன், ஜார்ஜ் டவுன்

கிளான் ஜெட்டிகள்

கடற்கரை நடைமேடையில் நடந்து, கிளான் ஜெட்டியிலிருந்து சூரிய அஸ்தமனத்தைக் காணவும். ஒரு கஃபேயில் உட்கார்ந்து கொண்டு, ஒரு நாள் நிறைவடைவதை இரசித்துக்கொண்டே குளிர் பானத்தை ஆர்டர் செய்யுங்கள். கடற்கரையில் உள்ள மிதக்கும் கிராமத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நெருக்கமான சமூகத்தின் பல குடும்பங்கள் தண்ணீருக்கு மேல் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான வீடுகளில் தொடர்ந்து வாழ்கின்றன.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 9 மணி– மாலை 9 மணி வரை

முகவரி

பெங்கலன் வெல்ட், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6011-6246 2884

Share On: