Penang Travel Deals
槟城旅游优惠
檳城旅遊優惠
Ưu đãi du lịch Penang
Penawaran Khusus Wisata Penang
ดีลท่องเที่ยวปีนัง
페낭 여행 상품
Tawaran Pelancongan Pulau Pinang
ペナン旅行の詳細
عروض السفر في بينانغ
பினாங்கு செல்வதற்கான பயண டீல்கள்
சீன சந்திர நாட்காட்டியின் 15 ஆவது நாளில் கொண்டாடப்படும் 'சாப் கோ மே' என்பது இரண்டு வார கால சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் இறுதி நாளாகும். இது சீன காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், கல்யாணம் ஆகாதவர்கள் மாண்டரின் டாஸ்ஸிங் விழாவை நடத்துகிறார்கள் மேலும் அவர்களுக்கு வரப்போகும் புது காதலையும் மகிழ்ச்சியையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இது சந்திர நாட்காட்டியின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் ஓர் இராசியின் விலங்கு ஆளும் அடையாளம் ஆகும். 2021 ஆம் ஆண்டு எருது ஆண்டாகும். சீனப் புத்தாண்டு தினத்தன்று மாலையில் குடும்ப உறுப்பினர்கள் 'ரீயூனியன் டின்னர்' -க்காக ஒன்று கூடும் போது கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
தைப்பூசம் என்பது முருகப்பெருமாணை வழிபடுதல் , நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுதல் மற்றும் நன்றி செலுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகப் பக்தர்களால் நடத்தப்படும் ஒரு சமயம் சார்ந்த நிகழ்வு ஆகும்.
பினாங்கு சி.என். ஓய் கொண்டாட்டம் (மியாஓ ஹூயி) என்பது சீன பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் சி.என். ஓய் -இன் போது நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு, இந்தக் கொண்டாட்டம் கிட்டத்தட்ட சமூக ஊடகங்கள் மற்றும் வெபினார் தளங்கள் மூலம் நடத்தப்படுகிறது.
பொங்கல் என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளாகும், இது பொதுவாக நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் அறுவடை செய்யப்படும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் அல்லது நீர் திருவிழா என்பது தாய்லாந்து மற்றும் பர்மிய பக்தர்களால் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிப்பதற்குக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியமான திருவிழாவாகும். ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடப்படுகிறது.
புனித ரமலான் மாதத்தின் 17 ஆம் நாளில், நபிகள் முஹம்மது S.A.W அவர்கள் முதன்முதலில் இறைவன் இறக்கி அருளிய அல் குர்ஆன் வசனங்களைப் பெற்றதை நினைவுகூரும் வகையில் நுசுல் அல்-குர்ஆன் என்று அழைக்கப்படும் தேசிய அளவிலான கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இது பொது விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பினாங்கு சர்வதேச உணவுத் திருவிழா (பி.ஐ.எஃப்.எஃப்), இது பார்வையாளர்களுக்கு பினாங்கின் புகழ்பெற்ற உணவுகளை சுவைப்பதற்கான ஓர் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. எண்ணற்ற விருப்பமான உணவுத்தேர்வுகளை வழங்குவது, பி.ஐ.எஃப்.எஃப் திருவிழா உணவு, கதைகள், அனுபவம், கலாச்சாரம் மற்றும் மரபுகளை அறிந்துகொள்ளும் ஓர் இடமாகும்.
முஸ்லீம்களின் நோன்பு மாதத்தில், மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு மாலை ரமலான் பஜார்களில் ஏராளமான உணவுகள், உள்ளூர் உணவுகள், பண்டிகை குக்கீகள், ஆடைகள் மற்றும் மதம் சார்ந்த பொருட்கள் ஆகியவை விற்கப்படுகின்றன.
புத்தரின் பிறந்த நாள், ஞானம் மற்றும் நிர்வாண சாதனையைக் கொண்டாடுவதற்காக வெசாக் தினம் பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தைப் பக்தர்கள் கோவில்களில் பிரார்த்தனையுடன் அனுசரிக்கின்றனர்.
வைசாகி அறுவடை திருவிழா மற்றும் பஞ்சாப் மக்களின் புத்தாண்டுத் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தத் தினத்தை சீக்கிய சமூகத்தினர் சீக்கிய கோவில்களில் பிரார்த்தனையுடன் அனுசரிக்கின்றனர்.
மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஷவால் மாதத்தின் தொடக்கத்தை தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகிறார்கள். இது ரமலான் மாதத்தில் ஒரு மாத நோன்பின் முடிவைக் குறிக்கிறது.
இது மால் ஹிஜ்ரா என்றும் அழைக்கப்படுகிறது, இது இஸ்லாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரா நாட்காட்டி) ஆண்டின் முதல் நாளைக் குறிக்கிறது. இது கிரிகோரியன் நாட்காட்டியில் ஜனவரி 1-ஆம் தேதிக்கு சமம். பெரும்பாலான மாநிலங்களில், இது ஒரு பொது விடுமுறை நாளாக அரசாங்க அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
செயின்ட் ஆன் பண்டிகை நாளைக் கடைப்பிடிக்க 10 நாள் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்.
பினாங்கில் நடைபெறும் ஜார்ஜ் டவுன் திருவிழா (ஜி.டி.எஃப்) என்பது, 2008 இல் ஜார்ஜ் டவுனை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும். இந்த ஆண்டு விழாவானது, நவீன மெய்நிகர் கூறுகளுடன் ஆன்-சைட் பொழுதுபோக்கின் பாரம்பரிய வடிவங்களை ஒருங்கிணைத்து, ஒரு கலப்பின திருவிழாவாக மறுவடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
ஜார்ஜ் டவுன் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் என்பது ஜார்ஜ் டவுனின் வாழும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும், நமது பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இந்த ஆண்டு இந்த நிகழ்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது, எனவே திருவிழா ஆர்வலர்கள் கலந்துரையாடும் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.
துரியன் என்பது பினாங்கில் கிடைக்கும் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும், மேலும் இதனைப் பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக சுவைக்க முயற்சிக்க வேண்டும். பினாங்கில் ஆங் ஹே, டி16, ஆங் பாக், ஆங் ஜின், டி700 மற்றும் பல விருது வென்ற துரியன் பழங்கள் உள்ளன.
1963 இல் மலாயா, சபா மற்றும் சரவாக் இணைந்து மலேசியாவை உருவாக்கியதைக் குறிக்கும் மலேசிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் ஆகும்.
மலேசியாவின் சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், பினாங்கு மாநில அரசு ஆண்டுதோறும் மெர்டேக்கா அணிவகுப்பை நடத்துகிறது, பல்வேறு அரசு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.
ஆவிகள் & பேய்கள் சுதந்திரமாக உலவுவதற்காக நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுதல் 'ஹங்ரி கோஸ்ட் திருவிழா' என்று நம்பப்படுகிறது. சாலையோரங்களில் தற்காலிக பலிபீடங்கள் அமைக்கப்பட்டிருக்கும், அங்கு ராட்சத ஜோஸ் குச்சிகள் ஏற்றப்பட்டு உணவு வழங்கப்படும். பேய்கள், ஆவிகள் & பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக இரவு நேர மேடை நாடகங்களும் நடத்தப்படுகின்றன.
ஒன்பது பேரரசர் கடவுள்களின் திருவிழா சந்திர நாட்காட்டியில் ஒன்பதாம் மாதத்தின் 1 முதல் 9 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சூலம் குத்திக்கொள்ளுதல், தீ மிதித்தல் போன்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன. கடைசி நாளில், கடவுள்கள் பல வண்ணமயமான மிதவைகளுடன் கடலுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
கிறிஸ்மஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும், இது முதன்மையாக டிசம்பர் 25 அன்று உலகெங்கிலும் பில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் மத மற்றும் கலாச்சார கொண்டாட்டமாக அனுசரிக்கப்பட்டது.
உலக யுனெஸ்கோ பாரம்பரிய தளமான ஜார்ஜ் டவுனில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜி.டி.எல். எஃப் திருவிழா, மலேசியாவில் சுதந்திரமான பேச்சுக்கான மிக முக்கியமான இலக்கியத் தளமாகும், மேலும் இது உலக இலக்கியத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது.
இந்த வண்ணமயமான திருவிழா "விளக்குகளின் திருவிழா" என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி, அறிவு, அமைதி மற்றும் செல்வத்திற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு அவர்களது வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன.
நவராத்திரி விழா ஒரு இந்து மத திருவிழா ஆகும். பக்தர்கள் 9 நாட்கள், சக்தி, செல்வம் மற்றும் கல்வி ஆகியவற்றைப் பெறுவதற்கான நம்பிக்கையில் துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.