பயணிகளுக்கு அத்தியாவசியமானவை

வானிலை

 

பினாங்கு ஆண்டு முழுவதும் வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் மித வெப்பமாகவும், வெயிலாகவும் இருக்கும். அதன் புவியியல் இருப்பிடம் & பருவமழை காலநிலை காரணமாக ஏராளமான மழைப்பொழிவும் இருக்கும். சீனப் புத்தாண்டின் போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பொதுவாக மித வெப்பமாகவும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையின் போது மழைக் காலமாகவும் இருக்கும். சுற்றியுள்ள கடல், காற்று அமைப்பு ஆகியவற்றாலே காலநிலை தீர்மானிக்கப்படுகிறது. சராசரி வெப்பநிலை பகலில் 30 ̊C க்கும் அதிகமாகவும், இரவில் 25 ̊C க்கும் அதிகமாகவும் இருக்கும். பகல் அல்லது இரவு என எதுவாக இருந்தாலும், பினாங்கின் வானிலை நகரத்திற்குள் நடக்கவும் அல்லது சைக்கிள் ஓட்டுவதற்கும் ஏற்றது.

அவசரநிலைக்கு 999 என்ற எண்ணிற்கு அழைக்கவும்:

  • காவல்துறை
  • தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை
  • குடிமைத் தற்காப்பு

கலாசாரம்

பன்முகக் கலாசாரத்தின் இடமாகவும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் இருக்கும் பினாங்கை ஒரே வார்த்தையில் வரையறுப்பது கடினம். எனவே, உள்ளூர் கலாசாரத்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்வது பினாங்கை நன்கு புரிந்துகொள்ள உதவும்.

மொழி

பார்வையாளர்க-ளுக்கான
கட்டணங்கள்

வெகுமதி தரும் கலாசாரம்

ரமலான் காலத்தில் கவனிக்க வேண்டியவை

பாதசாரிகள் கவனிக்க வேண்டியவை

பொது விடுமுறை

நாணயம்

தொலைத்தொடர்பு சேவைகள்

வங்கி

பிரார்த்தனைக்கான வசதிகள்

Title

Title

Language

The official language of Malaysia is Malay, but many locals are proficient in English as well. Most Penangites are competent in more than two languages. Almost all Chinese speak ‘Penang Hokkien’ which is unique because of the blend of Chinese with many ‘adopted’ Malay words and some English words. Penangites’ most common greeting is “Dah makan kah?” (Malay), “Chiak pa boi” (Hokkien), “Saptacha” (Tamil) which literally means “Have you eaten?”.

Most signs are written in Malay and English, with some in Chinese. Names of roads and main destinations are in Malay as well. It would be helpful to know some basic Malay although English is widely spoken in many areas.

பொது விடுமுறை

பினாங்கு பல்வேறு இனம், கலை, கலாசாரங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட ஒரு பன்முகங்களைக் கொண்ட மாநிலமாகும். இங்கு, கலாசாரம், மதம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்டிகைகளைக் கொண்டாடப்படுகிறது. மேலும், தேசிய, மாநில அல்லது உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டாட, பொது விடுமுறை வாழங்கப்படுகிறது. பினாங்கில் விடப்படும் ஒரு குறிப்பிட்ட விடுமுறை பிற மாநிலங்களில் விடுமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், குறிப்பிட்ட பண்டிகை விடுமுறை நாட்களின் தேதிகள், குறிப்பாக சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் ஆண்டுதோறும் மாறக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

மொழி

மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி மலாய், ஆனால் பல உள்ளூர்வாசிகள் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்கள். பெரும்பாலான பினாங்குவாசிகள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் திறமையானவர்கள். ஏறக்குறைய இங்குள்ள அனைத்து சீனர்களும் ‘பினாங்கு ஹொக்கியன்’ பேசுகிறார்கள், இது சீன மொழியைப் பல ‘தழுவிய’ மலாய் வார்த்தைகள் மற்றும் சில ஆங்கில வார்த்தைகளுடன் கலப்பதால் தனித்துவமாக உள்ளது. பினாங்குவாசிகள் அதிகமாகப் பயன்படுத்தும் வாழ்த்து “டா மக்கன் கா?” (மலாய்), “சியாக் பா போய்” (ஹொக்கியன்), “சாப்பிட்டாச்சா” (தமிழ்) அதாவது “நீங்கள் சாப்பிட்டீர்களா?” என்ற பொருள்.

பெரும்பாலான சாலை குறியீட்டுப் பலகைகள் மலாய், ஆங்கிலம், சில சீன மொழியிலும் உள்ளன. சாலைகள், முக்கிய இடங்களின் பெயர்கள் மலாய் மொழியிலும் உள்ளன. பல பகுதிகளில் ஆங்கிலம் பரவலாகப் பேசப்பட்டாலும் சில அடிப்படை மலாய் மொழி வாக்கியங்களை அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்.

பார்வையாளர்களுக்கான கட்டணங்கள்

பினாங்கில், பல சுற்றுலா தளங்கள் மலேசியர்களுக்கு மானியக் கட்டணத்தை வழங்குகின்றன. சில விலைப் பலகைகளில் “MyKad” என்ற வார்த்தையை பார்வையாளர்கள் கவனிக்கலாம். MyKad என்பது மலேசிய தேசிய அடையாள அட்டையைக் குறிக்கிறது. அங்கு “MyKad வைத்திருப்பவர்களுக்கான விலை” என்று குறிப்பிடும் அறிக்கைகள் மலேசியர்களுக்குப் பொருந்தக்கூடிய விலைகளைக் குறிப்பிடுகின்றன. குழப்பத்தைத் தவிர்க்க நுழைவுக் கட்டணம் & கட்டணங்கள் பொதுவாகத் தெரியும்படி காட்டப்படும். விலை குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில், கட்டணம் செலுத்துவதற்கு முன் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

வெகுமதி தரும் கலாசாரம்

ஹோட்டல்கள் & உணவகங்கள் போன்ற இடங்களில் ஏற்கனவே சேவைக் கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே கூடுதல் வெகுமதி வழங்கத் தேவையில்லை. வழங்கப்பட்ட சேவைகளுக்கு ஒரு சிறிய ஊக்கத்தொகை அளிக்க விரும்பினால், நீங்கள் வெகுமதி அளிக்கலாம்.

ரமலான் காலத்தில் கவனிக்க வேண்டியவை

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தில் நிகழும் ஒரு முக்கிய இஸ்லாமிய நிகழ்வு ‘ரமலான்’. இந்த நேரத்தில், முஸ்லீம்கள் தினமும் விடியற்காலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள். மேலும், தண்ணீர் குடிப்பதையும் தவிர்ப்பார்கள். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ரமலானின் போது அதிக அளவு உணவை வீணாக்கவோ அல்லது முஸ்லீம்கள் முன்னிலையில் கவனக்குறைவாக நடந்து கொள்ளவோ கூடாது.

பாதசாரிகள் கவனிக்க வேண்டியவை

இந்த யுனெஸ்கோ பாரம்பரிய நகரமான ஜார்ஜ்டவுனை சுற்றி பார்க்கவும், அங்கே உள்ள சிறு சிறு வீதிகளில் கிடைக்கும் சாலையோர உணவுகளைச் சாப்பிடுவதற்கும், நடந்து செல்வதே சிறந்த வழி ஆகும். பெரும்பாலான முக்கிய தெருக்களில் பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்குகள் இருக்கின்றன. பாதசாரிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதசாரி கடவை விளக்குகளின் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாணயம்

நாணயம்

மலேசிய நாணயம் ரிங்கிட், இது RM என எழுதப்படுகிறது. இதில் ஆறு மதிப்புகள் உள்ளன: RM 1, 5, 10, 20, 50, 100.

நாணயத்தை மாற்றுதல்

பணம் மாற்றும் இடங்கள் ஜார்ஜ்டவுன், ஷாப்பிங் சென்டர்கள் & விமான நிலையங்களில் பரவலாக உள்ளது. அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களை உள்நாட்டில் பயன்படுத்த முடியாது. நீங்கள் வருவதற்கு முன் உள்ளூர் நாணயத்தை சிறிது வாங்கிக் கொள்வது நல்லது.

தொலைத்தொடர்பு சேவைகள்

ஒரு சிம் கார்டு வாங்குதல்

விமான நிலையத்திற்கு வந்தவுடன் உள்ளூர் ‘சிம்’ கார்டை வாங்கிக் கொள்ளலாம். கிடைக்கக்கூடிய வெவ்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிலிருந்து தேர்வு செய்யவும். பேக்கேஜ்கள் கிளைம் பகுதியிலிருந்து நீங்கள் வெளியே வந்த பிறகு, வருகை கூடத்தில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையங்களைக் காணலாம். உங்கள் சிம் கார்டின் கிரெடிட் தீர்ந்துவிட்டால் அங்குள்ள பெரும்பாலான கன்வீனியன்ஸ் கடைகளில் கிரெடிட் டாப்-அப் செய்து கொள்ளலாம்.

Wi-Fi

பினாங்கு நகரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்தவை, அவர்களுக்கு ஏற்றவாறான Wi-Fi நெட்வொர்க்குகள் உள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகள் & பெரும்பாலான விடுதிகளில் Wi-Fi வழங்கப்படுகிறது. ஜார்ஜ்டவுன் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்கள், பொது இடங்களில் 1,550 Wi-Fi இடங்கள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் இலவச Wi-Fi வழங்கப்படுகின்றன. உங்களுடைய வசதிக்காக, அனைத்து நேரங்களிலும் இணையத்தை அணுக, இணையப் பேக்கேஜ் உள்ள உள்ளூர் சிம் கார்டை நீங்கள் வாங்கலாம்.

IDD அழைப்புகளைச் செய்வதற்கு

தொலைபேசி அல்லது கைப்பேசி இரண்டிலிருந்தும் அழைத்தல்:

1. அனைத்துலக அழைப்பிற்கான அணுகல் குறியீட்டை உள்ளிடவும்: 00
2. நாட்டின் குறியீடு.
3. வட்டாரக் குறியீடு.
4. தேவையான தொலைபேசி எண்.

 

வங்கி

பினாங்கின் நிதி மாவட்டம் ஜார்ஜ்டவுனின் மையப்பகுதியில் உள்ள லெபு பந்தாயில் (கடற்கரைத் தெரு) அமைந்துள்ளது. உங்கள் வங்கி தேவைகளுக்காக உள்ளூர் & அனைத்துலக வங்கிகள் இங்கு உள்ளன. இது தவிர பினாங்கில் உள்ள பிற இடங்களிலும் வங்கிகள் உள்ளது.

பினாங்கில் உள்ள வங்கிகள்:

  • அஃபின் வங்கி(Affin Bank)
  • அலையன்ஸ் வங்கி(Alliance Bank)
  • அம்பேங்க்(AmBank)
  • முமாலத் வங்கி(Bank Muamalat)
  • சீன வங்கி(Bank of China)
  • ரக்யாட் வங்கி(Bank Rakyat)
  • சிம்பனன் நேஷனல் வங்கி(Bank Simpanan Nasional)
  • சிஐஎம்பி வங்கி பெர்ஹாட்(CIMB Bank Berhad)
  • சிட்டி வங்கி(Citibank)
  • ஹாங் லியோங் வங்கி(Hong Leong Bank)
  • HSBC
  • மேபேங்க்(Maybank)
  • OCBC
  • பப்ளிக் பேங்க்(Public Bank)
  • RHB
  • ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு(Standard Chartered)
  • UOB
பிரார்த்தனைக்கான வசதிகள்

பினாங்கின் பன்முகத்தன்மை என்பது இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம், பௌத்தம் & தாவோயிசம் ஆகியவை சமூகத்தில் நன்கு பிரசித்திப்பெற்றவையாகும். பினாங்கில் பல மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன. இங்கு பயணிகள் தங்கள் நம்பிக்கைகளை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்கலாம்.