பினாங்கில் உள்ள 7 உலக அதிசயங்கள்

பினாங்கில் உள்ள 7 உலக அதிசயங்கள்

பினாங்கில் உள்ள 7 உலக அதிசயங்கள்

2 நாட்கள் 1 இரவுகள்

கண்ணோட்டம்

 

நாள் 1

 

நாள் 2

நாள் 1

உலகின் முதல் வெப்பமண்டலப் பட்டாம்பூச்சி மற்றும் பூச்சிகள் புகலிடம் (பினாங்கு பட்டாம்பூச்சிப் பண்ணையில் உள்ள என்டோபியா)

உலகின் முதல் வெப்பமண்டலப் பட்டாம்பூச்சி மற்றும் பூச்சிகள் புகலிடமான பினாங்கு பட்டாம்பூச்சிப் பண்ணையில் உள்ள என்டோபியாவில் உங்கள் நாளை பிரகாசமாகவும் சீக்கிரமாகவும் தொடங்குங்கள். அதன் தரைத் தளத்தில் இரண்டு விதமான இடங்கள் உள்ளன; ‘நேச்சர்லேண்ட்’ உயிருள்ள வெளிப்புற பூங்கா மற்றும் ‘தி கக்கூன்’ உள்ளரங்க கண்டறிதல் மையம். நேச்சர்லேண்ட் என்பது உயிருள்ள விவாரியம் பூங்கா ஆகும், மேலும் இது மலேசியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி மற்றும் தட்டாம் பூச்சிகளின் பூங்கா ஆகும், இங்கு ஒரே நேரத்தில் 15,000 சுதந்திரமாக பறக்கும் பட்டாம்பூச்சிகளைக் காணலாம். இதற்கிடையில், ‘தி கக்கூன்’ என்பது ஒரு அதிநவீன வசதியைக் கொண்டுள்ள இடமாகும். தொழில்நுட்ப வழிகாட்டுதல் விளக்கங்கள் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. முன்பு, பினாங்கு பட்டாம்பூச்சிப் பூங்கா என்றழைக்கப்பட்ட என்டோபியா ஒரு சுற்றுலாத் தளம் மட்டுமல்ல – இது இயற்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்கான மிகப்பெரிய வகுப்பறை மற்றும் கண்டறிதல் மையமாகும், இங்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் பூச்சிகள் சுதந்திரமாக வெளியே வந்து விளையாடலாம்.
செயல்படும் நாட்கள்

வியாழக்கிழமை – செவ்வாய்க்கிழமை
(புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 6.00
(கடைசி சேர்க்கை மாலை 5.00)

முகவரி

830, ஜலான் தெலுக் பஹாங், தெலுக் பஹாங்

தொடர்பு எண்

+604-888 8111

மின்னஞ்சல்

info@entopia.com

இணையத்தளம்

http://www.entopia.com

கின்னஸ் உலக சாதனை படைத்த உலகின் மிக நீளமான நீர் சறுக்கு (எஸ்கேப் தீம் பார்க்)

அதிகமான பதட்டத்தை உருவாக்கும் சில சாகசங்களுக்குத் தயாராகும் நேரம்! கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வென்ற உலகின் மிக நீளமான நீர் சறுக்கில் சறுக்குங்கள். ஏற்கனவே இருந்த சாதனையை முறியடித்த இந்த நீர் சறுக்கு, 1,111 மீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது, இந்த மகிழ்ச்சியான நான்கு நிமிட சவாரியானது, இயற்கையான காடுகள் மற்றும் மரங்களின் விதானங்கள் வழியாக 70 மீட்டர் சாய்வில் வளைந்து செல்கிறது. பின்பு, காற்றில் பறந்து வான வித்தைகளை செய்து உங்களின் சிறந்த காட்சியைக் காணுங்கள். தரையிலிருந்து உயரமான மரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஃப்ளையிங் லெமூர் ஜிப்லைனில்’ சறுக்குங்கள். ஃபேமிலி ட்விஸ்டர், மெகா டிராப், சூப்பர் லூப்பர், ஸ்பீட் ரேசர், டப்பி டனல் மற்றும் டப்பி ரேபிட்ஸ் போன்ற வேடிக்கையான நீர் சறுக்குகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இந்த வெளிப்புற சாகசப் பூங்காவானது இதயத்துடிப்பை அதிகரித்து, உற்சாகமுட்டும் அனுபவத்தை உங்களுக்கு அளிக்கிறது.
செயல்படும் நாட்கள்

செவ்வாய் – ஞாயிற்றுக்கிழமை
(திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 10.00 மணி – மாலை 6.00 மணி

முகவரி

828, ஜலான் தெலுக் பஹாங், தெலுக் பஹாங்

தொடர்பு எண்

+6017-797 7529 (Whatsapp மட்டும்)

மின்னஞ்சல்

info@escape.my

இணையத்தளம்

www.escape.my

உலகின் மிகச் செங்குத்தான சுரங்கப்பாதை வழித்தடம் (பினாங்கு மலை)

பினாங்கு மலையின் மேல் உங்கள் நாளை மகிழ்ச்சியான வழியில் நிறைவு செய்து கொள்ளுங்கள். 1923 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட பினாங்கு மலையில் அமைந்துள்ள ‘ஃபனிகுலர் இரயில்வே’ (funicular railway) ஆனது உலகின் செங்குத்தான சுரங்கப்பாதையின் தாயகமாகும், இது 27.9 டிகிரி செங்குத்தாகவும் 258 அடி நீளத்தையும் கொண்டுள்ளது. தொலைதூரப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் மலையின் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான புராதன வெர்ஜின் மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ள அதே நேரத்தில், தங்களது விருப்பமான ஜார்ஜ் டவுனின் இரவு நேர அழகைக் கண்டு இரசிக்கலாம். பினாங்கு மலையில் உள்ள ‘டேவிட் பிரவுன் உணவகம்’ மற்றும் உயரமான தேயிலைத் தோட்ட டெரஸ்கள் பழமையான வசீகரச் சூழலில் இரவு உணவைச் சாப்பிடுவதற்கான சரியான இடமாகும்.
செயல்படும் நேரம்

காலை 6.30 – இரவு 11.00
(டாப் ஸ்டேஷனிலிருந்து இரவு 11.00 மணிக்கு கடைசி ரயில்)
* டிக்கெட் கவுன்டர் நேரம்: காலை 6.15 – இரவு 9.15

முகவரி

ஜலான் புக்கிட் பெண்டேரா, அயர் இத்தாம்

தொடர்பு எண்

+604-828 8880

மின்னஞ்சல்

info@penanghill.gov.my

இணையத்தளம்

www.penanghill.gov.my

நாள் 2

உலகின் மிக உயரமான அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட ரிப்பன் பாலம் (தி ஹேபிட்டேட் பினாங்கு மலை)

பினாங்கு மலையில் மறைந்துள்ள, தி ஹேபிட்டேட்டில் உலகின் மிக உயரமான அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட ரிப்பன் பாலம் உள்ளது – லங்கூர் வே கேனோபி வாக். சுமார் 230 மீ நீளம் மற்றும் 40 மீ உயரத்தில் உள்ள, இயற்கை காட்சிகளைக் காணக்கூடிய பல தளங்களைக் கொண்ட, ‘லங்கூர் வே கேனோபி வாக்’-இல் நடந்து செல்வதன் மூலம் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான வெர்ஜின் காடுகளின் விதானம் மற்றும் அந்தமான் கடலின் இதுவரை காணக்கிடைக்காத இயற்கை காட்சிகளைப் பார்வையாளர்களால் காண முடியும்.
செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 7.00
(திங்கள் – வெள்ளி, கடைசி நுழைவு மாலை 5.30)

காலை 9.00 – இரவு 8.00
(சனி மற்றும் ஞாயிறு, கடைசி நுழைவு மாலை 6.30)

முகவரி

பினாங்கு மலை, ஜலான் ஸ்டீசன் புக்கிட் பெண்டேரா, அயர் இத்தாம்

தொடர்பு எண்

+6019-645 7741 (Whatsapp மட்டும்)

மின்னஞ்சல்

info@thehabitat.my

இணையத்தளம்

www.thehabitat.my

உலகின் முதல் தனியாக நிற்கும் செங்குத்தாக கீழிறங்கும் சறுக்கு (Free Standing Vertical Drop Slide) (டெக் டோம் பினாங்கு)

கற்றல் பயணம் என்பது ஒரு வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கும் அப்பால் செல்கிறது, பார்வையாளர்கள் பினாங்கின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு மையமான ‘டெக் டோம் பினாங்கில்’ ஒன்று அல்லது இரண்டு அறிவியல் உண்மைகளைக் கற்றுக்கொள்ளலாம். மாநிலத்தின் முக்கிய அடையாளமான கோம்தாரில் பல கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, விசை, இயக்கம்,
மின்காந்தவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் பற்றிய தேவையான தகவல்களை உள்ளடக்கும் அறிவியல் காட்சியகங்களும் உள்ளது. நிச்சயமாக, உலகின் முதல் தனியாக நிற்கும் செங்குத்தாக கீழிறங்கும் சறுக்கு என்று முடிசூட்டப்பட்ட ஜி-டிராப் எனப் பெயரிடப்பட்ட முக்கிய சுற்றுலா தளத்தைக் காணாமல் எந்தவொரு வருகையும் முழுமையடையாது!
செயல்படும் நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 10.00 – மாலை 7.00 (கடைசி சேர்க்கை மாலை 6.00)

முகவரி

ஜியோடெசிக் டூம், கோம்தார்

தொடர்பு எண்

+604-262 6663

இணையத்தளம்

www.techdomepenang.org

உலகின் மிக உயர்ந்த இடங்களிலிருந்து கயிறுகளில் இறங்கும் சவால் (Ropes Course Challenge) (வான பாலம்)

கோம்தாரின் 65 ஆவது நிலையில் அமைந்துள்ளது, உலகின் மிக உயர்ந்த ரோப்ஸ் கோர்ஸ், இந்த சவால் பயப்படுபவர்களுக்கானது அல்ல. கிராவிட்டிஸின் உயர்-உயர விளையாட்டு சாகசக் கோர்ஸில், ஜார்ஜ் டவுன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள காட்சிகளை ஒரு அற்புதமான பறவையின் பார்வையில் காணும் அதே வேளையில், அடுத்தடுத்து அட்ரினலின்-பம்பிங்கை உணரக்கூடிய சவால்களின் வரிசையையும் கொண்டுள்ளது! ரோப்ஸ் கோர்ஸ் 239 மீட்டர் உயரத்தில் உள்ளது! பொதுவாக, முழு கோர்ஸையும் முடிக்க குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும்.
செயல்படும் நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 10.00 – மாலை 7.00 (கடைசி சேர்க்கை மாலை 6.30)

முகவரி

லெவல் 65, கோம்தார், ஜலான் பினாங்கு, ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6012-336 8074
+6017-289 0366

மின்னஞ்சல்

sales@thetop.com.my

இணையத்தளம்

thetop.com.my/skybridge/

உலகின் முதல் நடக்கும் வளைந்த கோபுரம் (Tower Curved Skywalk) (தி டாப் ரெயின்போ ஸ்கைவாக்)

பினாங்கின் மிக உயரமான கட்டிடத்தின் தரையில் இருந்து 250 மீட்டர் உயரத்தில் உள்ள, ‘தி டாப்’ இன் ரெயின்போ ஸ்கைவாக் உலகின் முதல் வளைந்த டவர் ஸ்கைவாக் ஆகும். கண்ணாடி ஸ்கைவாக் பார்வையாளர்களின் கால்களுக்குக் கீழே உள்ள போக்குவரத்தை ஒரு கண்ணாடித் துண்டால் பிரித்து அவர்களைப் பரவசப்படுத்துகிறது! இரவுகளில், ஜார்ஜ் டவுனின் இரவுக் காட்சியைப் பார்வையாளர்களுக்கு காண்பிக்கும் நகரின் விளக்குகள் தரைமட்ட பட்டாசுகளைப்போல பிரகாசித்துக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

செயல்படும் நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 10.00 – இரவு 10.00 (புதன் – திங்கள்)
காலை 10.00 – மாலை 7.00 (செவ்வாய்)

முகவரி

1, ஜலான் பினாங்கு, கோம்தார், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6012-336 8074
+6017-289 0366

மின்னஞ்சல்

sales@thetop.com.my

 இணையத்தளம்

www.thetop.com.my/rainbow-skywalk/

Share On: