பினாங்கு தீவில் உள்ள ஹோட்டல்கள்

பினாங்கில் ஆடம்பர தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்பு விடுதிகள், குறைந்த விலையிலான விடுதிகள், கடற்கரையோர விருந்தினர் விடுதிகள் என பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப அருமையான தங்குமிடங்கள் உள்ளன.

ஜார்ஜ் டவுன்

ஜார்ஜ்டவுன், தேர்ந்தெடுக்கப்பட்ட தங்குமிடங்களைக் கொண்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊராக மாறியுள்ளது. இதில் அழகாக வடிவமைக்கப்பட்ட பாரம்பரியக் கடை வீடுகள், கடை வடிவிலான விடுதிகள், நவநாகரீக விடுதிகளும் உள்ளன. ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளத்தில் தங்கினால், ஜார்ஜ்டவுனை கால்நடையாகவும், சைக்கிள், மோட்டார் சைக்கிள் அல்லது ரிக்ஷா வழியாகவும் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.

கர்னி டிரைவ்

நகரத்திற்கும் கடற்கரைக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, கர்னி டிரைவின் உயரமான விடுதிகள் வியப்பில் ஆழ்த்தக்கூடிய கடல் & நகரத்தின் பரந்த தோற்றத்தை காட்சிப்படுத்துகின்றன. இங்கு சாலையோர உணவு, உலகத் தரம் வாய்ந்த விற்பனை கூடங்கள், இரவு கேளிக்கை மையங்கள் என அனைத்தும் உள்ளன.

வடக்குக்கரை

வடக்கில் பினாங்கின் புகழ்பெற்ற கடற்கரைப் பகுதியான தஞ்சோங் பூங்கா முதல் பத்து ஃபெரிங்கி வரையில், 3 முதல் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற கடற்கரை விடுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் ஏராளமான விற்பனை மையங்கள், இரவு நேர கேளிக்கை, சுற்றுலாத்தளங்கள் ஆகியவை மிக அருகிலேயே உள்ளன. மறக்க முடியாத கிராமிய அனுபவத்தைப் பெறுவதற்கு, அருகிலுள்ள சிறிய மீனவக் கிராமங்களின் தங்கும் விடுதிகளும் உள்ளன.

தென்கிழக்குப் பகுதி

தென்கிழக்கு மண்டலமானது தீவின் உயர் தொழில்நுட்ப பூங்காக்கள், சர்வதேச விமான நிலையம், கோல்ஃப் கிளப்புகள், தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இரண்டு பினாங்கு பாலங்கள் மற்றும் பினாங்கின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களுக்கு மிக அருகிலேயே உள்ளது. தேர்வு செய்வதற்கு, பலவிதமான வணிக-வகுப்பு ஹோட்டல்கள் உள்ளன, அத்துடன் அடித்தள பினாங்கு சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (SPICE) & பினாங்கு கடற்கரையோர மாநாட்டு மையம் (பி.டபிள்யூ.சி.சி) உள்ளிட்ட மாநாட்டு மையங்களின் கட்டுமானப் பணிகளை இன்னும் சில ஆண்டுகளில் நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.