பினாங்கைச் சுற்றிப் பார்த்தல்

உள்ளூர் போக்குவரத்து

     


டவுன்டவுன் பினாங்கு, குறிப்பாக ஜார்ஜ்டவுன் & அதன் சுற்றுப்புறங்கள் அளவு சிறியதாக இருப்பதால், நடந்து கொண்டே சுற்றிப் பார்க்கலாம். ரிக்ஷாவோ அல்லது லிங்க் பைக் மூலமாகவோ சுற்றிப் பார்க்கலாம். மாறாக, இலவச ஷட்டில் பேருந்து சேவை உள்ளது. இந்த சென்ட்ரல் ஏரியா டிரான்சிட் (CAT) பேருந்தானது நகரத்தை வசதியாக சுற்றிப் பார்க்கும் ஒரு வழியை வழங்குகிறது.


கெக் லோக் சி கோயில், பினாங்கு மலை, பத்து ஃபெரிங்கி, தெலுக் பாஹாங் போன்ற ஜார்ஜ்டவுனுக்கு வெளியே உள்ள இடங்களுக்குச் செல்ல இ-ஹெய்லிங் சேவைகள் உட்பட தரநிலையான நகரப் பேருந்துகளும் வாடகை வாகனங்களும் உள்ளன. உங்களுக்கு விருப்பமான போக்குவரத்து முறையைத் தீர்மானிப்பதற்கு முன், கால அட்டவணைகள் & கட்டணங்களை அறிந்து கொள்ளவும். அல்லது நீங்கள் தனியாக ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுக்கலாம், இதன்மூலம், உங்கள் வசதிக்கேற்ப சுற்றிப் பார்க்கலாம்.

ரிக்ஷா

     


ஜார்ஜ்டவுனை சுற்றி வருவதற்கான சிறந்த வழியாக ரிக்ஷா உள்ளது. உங்கள் பயணத்தைத் தொடங்கும் முன் ஒரு விலையை நிர்ணயித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு நபர்களுக்கு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு RM50 ஆகும். ஆரம்பிக்கும் இடமும் சேருமிடத்திற்கு இடையே உள்ள தூரத்தைப் பொறுத்து இது மாறுபடும்.

பொதுப் பேருந்து

     


மாநிலத்தின் பொதுப் பேருந்து சேவை 'ரேபிட் பினாங்' நிறுவனம் வழங்குகிறது. இந்தச் சேவை பினாங்கு தீவு முழுவதும், தீவுக்கு அப்பாலும் வழங்கப்படுகிறது. இது ஜார்ஜ்டவுனுக்குள் இலவச சென்ட்ரல் ஏரியா டிரான்சிட் (CAT) பேருந்து சேவையையும் வழங்குகிறது. கோம்தார், பினாங்கு சென்ட்ரல் ஆகிய இடங்களில் உள்ள முனையங்கள், பினாங்கு தீவு & செபராங் பிறை முழுவதும் செல்லும் பேருந்துகளுக்கான மையப் பரிமாற்ற முனையங்களாகும். எந்தப் பேருந்து வழி உங்களுக்கு சரியானதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள, அருகில் இருப்பவர்களிடம் கேட்கவும்அல்லது வழிக்காட்டிகளைப் பார்க்கவும். 'ரேபிட் பினாங்கு' பேருந்தில் ஏறியதும், நீங்கள் செல்லும் இடத்தை ஓட்டுநரிடம் தெரிவித்து, தேவையான தொகையைச் செலுத்தி, உங்கள் பயணத்திற்கான பயணச்சீட்டைப் பெறுங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக சரியான சில்லறைகளைத் தயாராக வைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.


* பயண தூரத்தின் அடிப்படையிலே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.


போக்குவரத்து அட்டை (1 மாத பயன்பாடு)
கட்டணம்:

பெரியவர்கள் RM110 (வெளிநாட்டவர்கள்) RM75 (மலேசியர்கள்),
மாணவர் RM55 (வெளிநாட்டவர்கள்) RM35 (மலேசியர்கள்)

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை
• அடையாள அட்டையின் புகைப்படம் 1
• விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் நகல் 1
• மாணவர் அடையாள அட்டையின் நகல் 1
• கட்டணம் RM5
இணையத்தளம்: www.rapidpg.com.my


இலவச CAT பேருந்து

இலவச 'கேட்' பேருந்து (சென்ட்ரல் ஏரியா டிரான்சிட்) என்பது ஜார்ஜ் டவுனுக்குள் இயங்கும் ஒரு இலவச ஷட்டில் பஸ் சேவையாகும். இது பயணிகள் பிரபலமான உள்ளூர் சுற்றுலாத் தளங்களுக்கு இலவசமாக செல்வதற்குப் பயன்படும் மிகப் பொதுவான போக்குவரத்து சேவையாகும். ஒவ்வொரு பயணமும் 15 நிமிட இடைவெளியில் தொடங்கும். "இலவச CAT பேருந்து" அடையாளத்துடன் உள்ள ரேப்பிட் பினாங்கு பேருந்துகளைக் கண்டறியுங்கள்.


செயல்படும் நேரம்:

காலை 6:00 மணி முதல் இரவு 11:45 மணி வரை


கட்டணம்:

இலவசம்



ஃபெர்ரி முனையத்திலிருந்து கோம்தார்-க்கு செல்லும் பேருந்து நிறுத்தங்கள்

2 ஃபெர்ரி முனையம் → 3 லிட்டில் இந்தியா → 4 குடியேற்றம் → 5 நெகாரா வங்கி → 6 அருங்காட்சியகம் → 7 முன்ட்ரி தெரு → 8 கேம்ப்பெல் தெரு → 9 கோம்தார்


கோம்தார்-இலிருந்து ஃபெர்ரி முனையத்திற்கு செல்லும் பேருந்து நிறுத்தங்கள்

9 கோம்தார் → 11 கெடா சாலை → 12 சௌரஸ்டா சந்தை → 13 கோம்தார் கிழக்கு → 14 கார்னர்வோன் தெரு → 15 கம்புங் கோலம் → 16 பினாங்கு உச்ச நீதிமன்றம் → 17 தேவன் ஸ்ரீ பினாங்கு → 18 கார்ன்வாலிஸ் கோட்டை → 19 டவுனிங் தெரு → 1 வெல்ட் கீ → 2 ஃபெர்ரி முனையம்

டாக்சிகள்

     


பொதுவாக, தீவின் அனைத்து இடங்களிலுமே டாக்சிகள் கிடைக்கின்றன. பார்வையாளர்களாகச் சுற்றிப் பார்ப்பதற்கு இது எளிதான வழியாகும். டாக்ஸியில் ஏறும் முன்பே விலையைப் பேசி உறுதி செய்துகொள்ளுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு எவ்வளவு கட்டணம் ஆகும் என்று கேட்பதன் மூலம், விலை நிர்ணயம் மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் பேரம் பேசலாம்.



சராசரிக் கட்டணம்
ஜார்ஜ் டவுனிலிருந்து பினாங்கு சர்வதேச விமான நிலையம் வரை: RM45
ஜார்ஜ் டவுனிலிருந்து பினாங்கு மலை அல்லது கெக் லோக் சி வரை: RM30


இ-ஹெய்லிங் சேவைகள்

     


'க்ராப்' மற்றும் 'ஏர்ஏசியா ரைடு' போன்ற 'சவாரிப்பகிர்வு' செயலிகள் பினாங்கில் உள்ளன. உங்கள் பயணங்களை முன்பதிவு செய்ய, செயலியைப் பதிவிறக்கவும். இதற்கான கட்டணத்தை பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தலாம்.

கார் வாடகை சேவைகள்

     


பெரும்பாலான பெரிய கார் வாடகை நிறுவனங்களுக்கு பினாங்கிலே அலுவலகங்கள் உள்ளன. மேலும், பல விமான நிலையங்களில் அவர்களின் சேவை மையங்கள் உள்ளன. நீங்கள் வந்தவுடன் ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டு, வந்தவுடன் சாவியை எடுத்துக் கொள்ளலாம். பயண நிறுவனத்திலும் (travel agency) காரை நீங்கள் வாடகைக்கு எடுக்கலாம். மேலும் அங்கு உங்களின் வருகையை எளிதாக்க உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளையும் ஓட்டுநர்களையும் முன்பதிவு செய்யலாம்.


யூரோப்கார் ரெண்டல்

Tel: +6012 329 3010


ஹாக் பினாங்கு ரெண்ட்-எ-கார்

Tel: +6016 207 6536


ஹெர்ட்ஸ் கார் ரெண்டல்

Tel: +604 226 8602


காசினா ரெண்ட்-எ-கார்

Tel: +604 228 8602


லா பெல்லி ரெண்ட்-எ-கார்

Tel: +604 264 2717


மேஃப்ளவர் கார் ரெண்டல்

Tel: +604 641 1191


புதிய பாப் ரெண்ட்-எ-கார்

Tel: +604 226 6111


ஓரிக்ஸ் பினாங்கு ரெண்ட்-எ-கார்

Tel: +604 644 4772


ஃபெர்ரி

     


இரண்டு வகையான ஃபெர்ரி சேவைகள் உள்ளன: விரைவு ஃபெர்ரிக்கள் (பாதசாரிகளுக்கு மட்டும்) & வாகனங்களுக்கான ஃபெர்ரிக்கள் (மோட்டார் சைக்கிள்கள் & சைக்கிள்களுக்கானது). குளிரூட்டப்பட்ட விரைவு ஃபெர்ரிக்கள் பங்கலான் சுல்தான் அப்துல் ஹலீம் (பட்டர்வொர்த்) முதல் ஸ்வெட்டன்ஹாம் பையர் க்ரூஸ் டெர்மினல் (ஜார்ஜ் டவுன்) வரை சேவை வழங்குகின்றன. அதே நேரத்தில் வாகனங்களுக்கான ஃபெர்ரிக்கள் பங்கலான் சுல்தான் அப்துல் ஹலீம் (பட்டர்வொர்த்) முதல் பங்கலான் ராஜா து உடா (ஜார்ஜ் டவுன்) வரை சேவை வழங்குகின்றன. நீங்கள் கோலாலம்பூர் அல்லது பிற நகரங்களில் இருந்து பினாங்குக்கு இரயிலில் செல்கிறீர்கள் என்றால், ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பட்டர்வொர்த்தில் உள்ள பங்கலான் சுல்தான் அப்துல் ஹலிமிலிருந்து தீவிற்கு செல்ல ஃபெர்ரியில் ஏறலாம்.



செயல்படும் நேரம்: காலை 6.30 மணி - இரவு 10.30 மணி
செயல்படும் இடைவெளிகள்: 30 நிமிடங்கள்