வகுப்புகள் & பயிற்சிப் பட்டறைகள்

  • ட்ராபிகல் ஸ்பைஸ் கார்டன் சமையல் பள்ளி பினாங்கில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. பல்தரபட்ட அம்சங்களுடன் தொடங்கப்பட்ட சமையல் பள்ளியாகும். அனுபவம் வாய்ந்த & தொழில்முறை சமையல்காரர்களின் வழிகாட்டலில் இது ஒரு மறக்கமுடியாத சமையல் அனுபவத்தை அளிக்கின்றது.

  • ஜோஸ் ஸ்டிக் என்பது சீன சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படையான ஒரு வகையான ஊதுபத்தி ஆகும். இது பெரும்பாலும் பூஜை வழிபாட்டின்போது எரிக்கப்படுகிறது. மறைந்த திரு. லீ பெங் சுவான் உலகின் மிகப் பழமையான ஜோஸ் ஸ்டிக் தயாரிப்பாளராக அறியப்பட்டவர். திரு. லீ, உலகப்போருக்கு முந்தைய கருணை தேவி கோவிலுக்கு அருகிலுள்ள தனது கடையில் ஜோஸ் ஸ்டிக்குகளை செய்து வந்தார். அவரது ஜோஸ் ஸ்டிக் தயாரிக்கும் தொழிலை அவரது குடும்பத்தினர் தற்போது பார்த்து வருகின்றனர். பாரம்பரிய ஆர்வலர்களுக்கு இது சிறந்த அனுபவமாக இருக்கும்.

  • கூடைகளும் தளவாடப் பொருள்களும் தயாரிப்பதற்குப் பிரம்புகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 'பினாங்கில் பாரம்பரியப் பொக்கிஷமாகக் கருதப்படும் மூத்த பிரம்பு பின்னுபவரான சிம் பக் டெய்க்குடன் இணைந்து நீங்களும் பிரம்பு பொருட்களைப் பின்னிச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் இரண்டாம் தலைமுறை பிரம்பு பின்னுபவர் ஆவார், அவர் குடும்பம் மலாயாவுக்கு வருவதற்கு முன்பு, சீனாவின் தியோச்யூவில் உள்ள அவரது தந்தையிடமிருந்து பிரம்பு பின்னும் திறமைகளைக் கற்றுக்கொண்டார்.

  • கென்னி லோ என்ற மணிகள் கொண்ட காலணிகளை உருவாக்கும் கைவினைஞர் மூலம் மணிகளைக் கொண்ட இந்த காலணிகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்றுக்கொள்க. கசுட் மானிக் (மணிகள் கொண்ட காலணி) பெரனாகன் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் மிகவும் மதிப்புமிக்கது மேலும் மென்மையான வடிவமைப்புகளில் கையாலே தைக்கப்படுகிறது.

  • பத்திக் செயல்முறையைக் கற்றுக் கொண்டு, ரோஸானாவின் பத்திக்கில் உங்கள் சொந்த ஆக்கப்பூர்வமான வடிவங்களையும், வடிவமைப்புகளையும் உருவாக்கவும். இந்தப் பயிற்சிப் பயிலரங்கு ஒரு பத்திக் நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் பத்திக் தயாரிப்புகள் குறித்த படிப்படியான வழிமுறையை விளக்கும்.

  • வயாங் குளிட் என்பது கைப்பாவைக் கூத்து என்னும் பாரம்பரிய நடவடிக்கையாகும். இது செதுக்கப்பட்ட பொம்மை உருவங்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு அக்கூத்து நடைபெறும். உங்கள் வீட்டில் நீங்கள் இதனை விளையாடுவதற்கு, கைப்பாவை பொம்மைகளை உருவாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும் பயிற்சி வழங்கப்படும்.