பாலிக் புலாவ்: தீவின் மறுபக்கம்

பாலிக் புலாவ்: தீவின் மறுபக்கம்

பாலிக் புலாவ்: தீவின் மறுபக்கம்

பாலிக் புலாவ்: தீவின் மறுபக்கம்

பாலிக் புலாவ் முனையப் பேருந்திலிருந்து
யேசுவின் புனிதப் பெயர் தேவாலயம்

பாலிக் புலாவில் உள்ள ஒரு முக்கிய அடையாளச் சின்னமாக இயேசுவின் புனிதப் பெயர் தேவாலயம் உள்ளது. 1854-இல் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் பினாங்கில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் நடுக்கூடம், சரணாலயம், இரண்டு இறக்கைக் கூடங்கள், வண்ணமேற்றிய கண்ணாடி ஜன்னல்கள், மணிக் கோபுரம் மற்றும் டெனர் பெல் ஆகியவைகள் தொடர்ச்சியாகச் சீரமைக்கப்பட்டது. இன்று, இது ஒரு அற்புதமான கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
செயல்பாட்டு நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 6.30 – இரவு 8.00

மின்னஞ்சல்

hnj1854penang@yahoo.com

இணையதளம்

www.hnjpenang1854.org

முகவரி

ஜலான் பாலிக் புலாவ், பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+604-866 8545

வீதி ஓவியங்கள்

பாலிக் புலாவின் வீதி ஓவியங்களை உங்கள் ஸ்னாப்ஷாட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுங்கள். சமகால கிராஃபிட்டி கலைஞரான அசிட் ராமன் அப்துல்லாவின் ஒரு தலைசிறந்த படைப்பான “ரொட்டி விற்பவர்” சுவரோவியத்திலிருந்து வீதி ஓவியங்களைக் காணத் தொடங்குவது சிறப்பு. மூன்று தசாப்தங்களாக பாரம்பரிய முறையில் ரொட்டி விற்பனை செய்து வரும் உள்ளூர் ரொட்டி விற்பனையாளரான முனியாண்டியின் நினைவாக இந்த மாபெரும் சுவரோவியம் வரையப்பட்டது. பின்னர், பாலிக் புலாவ் ரவுண்டானாவை நோக்கிச் செல்லுங்கள், அங்கு ரஷ்யக் கலைஞரான ஜூலியா வோல்ச்கோவாவின் “மீனவர்”, “நடனமாடும் ஹக்கா பெண்” மற்றும் “சிலாட் குரு” போன்ற ஏராளமான சுவரோவியங்கள் வரலாற்று அடையாள சின்னத்திற்கு அருகிலேயே இருக்கின்றன. இந்தத் தலைசிறந்த படைப்புகள் அனைத்தும் நகரத்தின் பொருளாதார மற்றும் கலாச்சாரக் கதைகளை விளக்குகின்றன.
ஜூலியா வோல்ச்கோவாவின் ‘மீனவர்’ (GPS 5.351839, 100.235673)

ஜூலியா வோல்ச்கோவாவின் ‘நடனமாடும் ஹக்கா பெண்’ (GPS 5.349820, 100.234219)

ஜூலியா வோல்ச்கோவாவின் ‘சிலாட் குரு’ (GPS 5.349398, 100.233800)

பாலிக் புலாவ் ரவுண்டானா

ஒன்றே ஒன்றான பாலிக் புலாவ் ரவுண்டானா கட்டாயம் பார்க்க வேண்டிய ஓர் அடையாளச் சின்னமாகும். அளவில் சிறியது என்றாலும் பாரிய வரலாற்றைக் கொண்டது, இந்த வரலாற்று நினைவுச்சின்னம் 1882 ஆம் ஆண்டில் மலாக்கா கவர்னர் சர் ஃபிரடெரிக் வெல்ட், பாலிக் புலாவுக்கு வருகை புரிந்ததை நினைவுகூரும் வகையில் ஹக்கா தொழிலதிபர் கோ சியாங் ஃபேட்டால் கட்டப்பட்டது. கடந்த காலத்தில், இந்த அடையாளச் சின்னமானது ஒரு பொது நீர் குழாயாகவும் மற்றும் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளுக்கான நீர் தொட்டியாகவும் செயல்பட்டது. இந்த ரவுண்டானா தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மூன்று முக்கிய சாலைகள் ஒன்றிணைவதைக் குறிக்கிறது.
முகவரி

ஜலான் பாலிக் புலாவ், பாலிக் புலாவ்

ஆடி ட்ரீம் ஃபார்ம்

பண்ணை விலங்குகளை அரவணைப்பது உங்களுக்குப் பிடிக்குமா? உங்களுக்கான சரியான இடம் ஆடி ட்ரீம் ஃபார்ம். ஒரு மகிழ்ச்சி தரும் வெளிப்புற பண்ணைச் சூழ்நிலையில், முயல்கள் முதல் பறவைகள் மற்றும் ஒட்டகங்களும் உள்ள பண்ணையில், விலங்குகளைப் பார்வையாளர்கள் நெருக்கமாகவும், தனிப்பட்ட முறையிலும் காண்பதற்கு வழிவகை செய்யும் இந்தப் பண்ணையானது பார்வையாளர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது. பார்வையாளர்கள் பண்ணை விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக அவற்றுடன் விளையாடவும், உணவளிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள், இது இளையோர்களுக்கும், மனதளவில் இளையவர்களாக இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 7.00
(கடைசி சேர்க்கை மாலை 6.00)

முகவரி

145, எம்.கே பி, சுங்கை ரூசா, பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+6012-499 9099

இணையத்தளம்

www.audipenang.com

சிலா (SILA) ஸ்டுடியோ செராமிக்

பீங்கான்கள் மிகவும் பிடிக்குமா? சிலா(SILA) ஸ்டுடியோவால் நடத்தப்படுகிறது ‘சென்சஸ் இன்ஜினுவிட்டி லவ் அதென்டிசிட்டி (Senses Ingenuity Love Authenticity, SILA) -இன் சுருக்கமே சிலா ஆகும். இந்த காட்சிக்கூடம் பீங்கான்களைக் காட்சிப்படுத்துகின்றன. முதன்மை கலைஞர் ஷம்சு முகமது மற்றும் அவரது நண்பர்களினால் இது நடத்தப்படுகிறது. இங்குள்ள அணிகலன்கள், தட்டுகள், கிண்ணங்கள், சுவரோவியம் மற்றும் சிற்பங்களின் தனித்துவமான வடிவமைப்புகள் நிச்சயமாக பீங்கான் சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஈர்க்கும். இந்த ஸ்டுடியோ மூன்று மணிநேரம் பீங்கான் பொருட்கள் செய்யும் பயிற்சியையும், ஒரு நாள் மற்றும் ஒரு மாதம் பீங்கான் பொருட்கள் செய்யும் பயிற்சி வகுப்புகளையும் கொண்டுள்ளது.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை
(சனிக்கிழமை சந்திப்பின் மூலம் மட்டும்)

செயல்படும் நேரம்

காலை 9 மணி – மாலை 5 மணி வரை

மின்னஞ்சல்

shamsu62@gmail.com

இணையதளம்

www.facebook.com/silastudioceramic

முகவரி

புசாட் இன்குபேட்டர் கிராஃப்டங்கன் பாலிக் புலாவ், ஜலான் சுங்கை ரூசா, பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+6018-942 3788

லீன் செங் கூலிங் ஃபேஸ் பவுடர்

அரிசி என்பது உணவு மட்டுமல்ல; இது கூலிங் ஃபேஸ் பவுடர் (பெடக் செஜுக்) எனப்படும் பாரம்பரிய அழகு சாதனப் பொருளைத் தயாரிக்கப் பயன்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கவும், சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும், அரிப்புகளைப் போக்கவும் உதவும் என நம்பப்படுகிறது. லீன் செங் கூலிங் ஃபேஸ் பவுடர் கடையில் நீங்கள் தரமான ஃபேஸ் பவுடரை வாங்கலாம் மேலும் இந்தத் தயாரிப்பை உருவாக்கும் அனுபவத்தைப் பெறலாம். இதைத் தயாரிக்க அரிசி மற்றும் தண்ணீர் மட்டுமே தேவைப்படும், இந்தத் தயாரிப்பு முறைக்கான நொதித்தல், அரைத்தல், வடிகட்டுதல் மற்றும் உலர்த்துதல் ஆகியவற்றிற்கு ஒரு மாதம் வரை ஆகும்.
செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 8.00 – மாலை 5.00
கேடை: காலை 8.00 – இரவு 8.00

தொடர்பு எண்

+6019-481 1810

முகவரி

160, முகிம்-டி, கோலா ஜலான் பாரு, பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+6016-428 4896 / +6019-474 4684

ஹுட்டான் பயா லாவுட்

ஹுட்டான் பயா லாவுட் (டமன் பயா பகாவ் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மரப்பலகைகளால் பொருத்தப்பட்ட ஒரு சிறிய சதுப்புநிலக் காடு ஆகும், இது தனித்துவமான சதுப்புநிலக் காடுகளின் காட்சிகளையும், ஒலிகளின் அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
முகவரி

ஜலான் குவாலா சுங்கை புருங், கம்புங் சுங்கை புருங், பாலிக் புலாவ்

 பாண்டாய் மலிண்டோ

தீவின் இந்த பகுதிகளில் உங்களது பயணத்தை நிறைவுசெய்ய சிறந்த இடங்களில் ஒன்று அழகிய பாண்டாய் மலிண்டோ ஆகும். கடலின் பரந்த நிலப்பரப்புக்கு செல்லும் தங்க மணலின் நீண்ட நீளமான காட்சிகளைக் கொண்ட இந்தக் கடற்கரையானது சூரிய அஸ்தமனத்தைக் காண சிறந்த இடங்களில் ஒன்றாகும்,
முகவரி

ஜலான் குவாலா சுங்கை புருங், கம்புங் சுங்கை புருங், பாலிக் புலாவ்

Share On: