இட வரைபடம் (லோக்கேஷன் மேப்)

பினாங்கு உங்களை வரவேற்கிறது

 

பட்டர்வொர்த்திலிருந்து பினாங்கு தீவுக்கு செல்ல 20 நிமிடங்கள் ஃபெர்ரியில் (படகு) சவாரி செய்ய வேண்டும். பினாங்கு தீவை, பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இரண்டு பாலங்கள் இங்கே உள்ளன. பினாங்கு பாலம் & இரண்டாவது பினாங்கு பாலம் (ஜம்பட்டான் சுல்தான் அப்துல் ஹலீம் மு’அட்ஸம் ஷா). பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் & கத்தார் போன்ற பல நாடுகளிலிருந்து அனைத்துலக விமானங்கள் தரையிறக்கம் காண்கின்றன.


லங்காவி தீவுக்கு செல்ல ஃபெர்ரியில் 2 மணி 45 நிமிடம் சவாரி செய்ய வேண்டும் அல்லது விமானத்தில் 35 நிமிடத்தில் செல்ல முடியும். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்ல விமானத்தில் 50 நிமிடம் பயணம் செய்யவேண்டும். அல்லது நான்கு மணி நேர இரயில் அல்லது வாகனத்தில் பயணம் மேற்கொள்ளலாம். சபா மாநிலத்தின் தலைநகரான கோத்தா கினாபாலுவை 2 மணி 40 நிமிடங்கள் விமானப் பயணத்தில் சென்றடையலாம்.

மேலும் தகவல்களுக்கு ஐகானின் மேல் சுட்டியை (மவுஸை) வைக்கவும்

பினாங்கு மலை

பினாங்கு பட்டாம்பூச்சிப் பண்ணையில் உள்ள என்டோபியா

பினாங்கு தாவரவியல் பூங்கா

பினாங்கு தேசியப் பூங்கா

ஒன்பது பேரரசக் கடவுள்கள் கோயில் (டோ பூ காங் கோயில்)

பினாங்கு பாம்புக் கோயில்

கெக் லோக் சி கோயில்

பினாங்கு பறவை பூங்கா

செயிண்ட். ஆன்னீ மைனர் பசிலிக்கா

பினாங்கு ஃபெர்ரி

பினாங்கு சர்வதேச விமான நிலையம்

பினாங்கு பாலம்

ஜம்பத்தான் சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸம் ஷா

இவை அனைத்தும் பினாங்கில் உள்ளது