Penang Travel Deals
槟城旅游优惠
檳城旅遊優惠
Ưu đãi du lịch Penang
Penawaran Khusus Wisata Penang
ดีลท่องเที่ยวปีนัง
페낭 여행 상품
Tawaran Pelancongan Pulau Pinang
ペナン旅行の詳細
عروض السفر في بينانغ
பினாங்கு செல்வதற்கான பயண டீல்கள்
உலகின் மிக நீளமான நீர் சறுக்கில் சறுக்குவது முதல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பினாங்கு மலையின் உயிர்க்கோளக் காப்பகமான 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான வெர்ஜின் மழைக்காடுகளின் அதிசயங்களைக் கண்டுபிடிப்பது வரை, பினாங்கு உலகத் தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிறைந்த சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது.
கலாசாரம் & கலைக்கூடங்களின் இடமாக மட்டுமில்லாமல் பினாங்கில் பல கடற்கரைகளும் உள்ளது. பொதுவாக, பெரும்பாலான கடற்கரை விடுதிகளில் வேடிக்கையான நடவடிக்கைகள் நடைபெறும், மிகவும் பிரபலமான பத்து ஃபெரிங்கி அல்லது தஞ்சோங் பூங்கா கடற்கரைகளில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் & துரித உணவு விற்பனை கடைகள் முதல் கேளிக்கை மையங்கள், உணவகங்கள் வரை அனைத்து உணவருந்தும் இடங்களிலும் சிறப்பான சேவைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத மியாமி கடற்கரை, பரபரப்பான பத்து ஃபெரிங்கியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. தெலுக் பஹாங் பகுதியில் உள்ள கடற்கரைகளுக்குப் படகு சவாரி மூலமாகவோ அல்லது பினாங்கு தேசிய பூங்கா வழியாக நடந்தும் செல்லலாம். மாஸ் பீச், கெராச்சுட் பீச் ஆகியவை நிதானமாகக் குளிப்பதற்கும் அமைதியாகப் படுத்து ஓய்வெடுப்பதற்கும் சரியான இடங்கள் ஆகும். தீவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள தஞ்சோங் அசாம், ஓம்பக் டமாய், பாசிர் பெலாண்டா ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் தளமாகவும், அதே வேளையில், பாலிக் புலாவில், பண்டாய் மலிண்டோ, பண்டாய் பாசிர் பஞ்சாங்கில் சூரிய ஒளியையும் கடல் காற்றையும் இயற்கையாக இரசிக்க முடியும். செபெராங் பெராயில், பண்டாய் ரொபினா, பண்டாய் பெர்சி, பாகான் அஜாம் போன்ற கடற்கரைகள் உள்ளூர் மக்களிடையே பிரபலமாக உள்ளன.
பினாங்கு தீவிலும், செபராங் பெராய் கடற்பகுதியிலும் பல சிறிய தீவுகள் உள்ளன. மிகவும் பிரபலமான தீவான பூலாவ் அமான் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அது தவிர புலாவ் திக்குஸ் போன்ற ஏராளமான தீவுகள் தொலைவில் அமைந்துள்ளன. இதில் சூரிய சக்தியில் இயங்கும் கலங்கரை விளக்கமும் ஒரு புனிதரின் நினைவிடமும் உள்ளது. பூலாவ் கெடுங்கில் மறக்கப்பட்ட காலனித்துவ ஆயுத சேமிப்புக் கட்டடத்தை மறைத்து வைத்திருக்கிறது. மேலும், புலாவ் கெண்டி எவரும் செல்லாத இயற்கை அழகு நிறைந்த மக்கள் வசிக்காத தீவு ஆகும். இந்தத் தீவுகளுக்குப் படகின் மூலம் மட்டுமே செல்ல முடியும். இது அவற்றின் தனித்துவமான அழகைக் கூட்டுகிறது.
130 மில்லியன் ஆண்டுகள் பழமையான வெர்ஜின் மழைக்காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கொண்ட பினாங்கு உண்மையிலேயே நடைப் பிரயாணம் செய்பவர்களின் சொர்க்கமாகும். பினாங்கு மலைக்குச் செல்லும் பாதைகள் மாநிலத்தில் உள்ள சில சிறந்த ஹைக்கிங் பாதைகள் ஆகும். பினாங்கு தாவரவியல் பூங்காவிற்கு அருகிலுள்ள மூன் கேட் 5, இளைஞர் பூங்கா ஆகியவை நடக்கக்கூடிய பாதைகளில் ஒன்றாகும். ஆமைகள் சரணாலயத்தில் குட்டி கடல் ஆமைகளைப் பார்ப்பது, பிரமிக்க வைக்கும் கடற்கரைகளைக் காண்பது ஆகியவை உங்கள் ஹைக்கிங் விருப்பப் பட்டியலில் இருந்தால், தெலுக் பஹாங்கில் உள்ள பினாங்கு தேசிய பூங்காவிற்கு மேற்கே மேற்கொண்டு பயணிக்கவும். வியப்பூட்டும் நீர்வீழ்ச்சிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ஹைக்கிங் பயணத்தை நிறைவுசெய்ய விரும்புபவர்கள் பாலிக் புலாவில் உள்ள டிட்டி கெராவாங் ஹைக்கிங் பாதையில் மகிழ்ச்சியுடன் நடக்கலாம். ஊரின் பிரதான பகுதியில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் பொழுதுபோக்கு பூங்காவின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. பின்னர், பூங்காவில் உள்ள அற்புதமான நீரோடைகள், ஆழமற்ற குளங்கள், நீர்வீழ்ச்சிக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் ஒரு நாள் முழுவதும் ஹைக்கிங் செய்ததற்குப் பின்னர் தேவையான ஓய்வை அனுபவிக்க முடியும். ஹைக்கிங் வழிகாட்டியைப் பின்பற்றுவதைத் தேர்வுசெய்யவும் அல்லது சொந்தமாக நடப்பதைத் தேர்வு செய்யவும். ஹைக்கிங் செய்யும் சில இடங்களில் வசதிகள் இல்லாமல் வரம்பிடப்பட்டிருப்பதால், அதிக அளவு உணவையும் தண்ணீரையும் எடுத்துச் செல்லுங்கள்.
130 மில்லியன் ஆண்டுகள் பழமையான வெர்ஜின் மழைக்காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கொண்ட பினாங்கு உண்மையிலேயே நடைப் பிரயாணம் செய்பவர்களின் சொர்க்கமாகும். பினாங்கு மலைக்குச் செல்லும் பாதைகள் மாநிலத்தில் உள்ள சில சிறந்த ஹைக்கிங் பாதைகள் ஆகும், பினாங்கு தாவரவியல் பூங்காவிற்கு அருகிலுள்ள மூன் கேட் 5 பாதை மற்றும் இளைஞர் பூங்கா ஆகியவை நடக்கக்கூடிய பாதைகளில் ஒன்றாகும். ஆமைகள் சரணாலயத்தில் குட்டி கடல் ஆமைகளைப் பார்ப்பது மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளைக் காண்பது ஆகியவை உங்கள் ஹைக்கிங் விருப்பப் பட்டியலில் இருந்தால், தெலுக் பஹாங்கில் உள்ள பினாங்கு தேசிய பூங்காவிற்கு மேற்கே மேற்கொண்டு பயணிக்கவும். வியப்பூட்டும் நீர்வீழ்ச்சிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ஹைக்கிங் பயணத்தை நிறைவுசெய்ய விரும்புபவர்கள் பாலிக் புலாவில் உள்ள டிட்டி கெராவாங் ஹைக்கிங் பாதையில் மகிழ்ச்சியுடன் நடக்கலாம். ஊரின் பிரதான பகுதியில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் பொழுதுபோக்கு பூங்காவின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது, அது குளிர்ச்சியான காற்று மூலம் ஹைக்கர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. பின்னர், பூங்காவில் உள்ள அற்புதமான நீரோடைகள், ஆழமற்ற குளங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிக்குச் செல்லுங்கள், அங்கு நீங்கள் ஒரு நாள் முழுவதும் ஹைக்கிங் செய்ததற்குப் பின்னர் தேவையான ஓய்வை அனுபவிக்க முடியும். ஹைக்கிங் வழிகாட்டியைப் பின்பற்றுவதைத் தேர்வுசெய்யவும் அல்லது சொந்தமாக நடப்பதைத் தேர்வு செய்யவும். ஹைக்கிங் செய்யும் சில இடங்களில் வசதிகள் இல்லாமல் வரம்பிடப்பட்டிருப்பதால், அதிக அளவு உணவு மற்றும் தண்ணீரை பேக் செய்து கொள்ளுங்கள்.
பசுமையான சூழலுக்கு மத்தியிலோ அல்லது பள்ளத்தாக்கின் விளிம்புகளுக்கு மத்தியில் ஒருவர் கோல்ஃப் விளையாட விரும்பினாலும், சர்வதேசத் தரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சிறந்த கோல்ஃப் மைதானங்கள் உள்ளன. உண்மையில், பினாங்கு விடுமுறையைக் கழிக்க ஒரு சிறந்த இடமாகும், இது ஒரு மறக்கமுடியாத விடுமுறையையும், ஓர் அற்புதமான கோல்ஃப் விளையாட்டுத் தளத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. பின்வருவன மாநிலத்தில் உள்ள பிரபலமான கோல்ஃப் மைதானங்கள்:
நீங்கள் சைக்கிளில் சென்று காணக்கூடிய அளவிற்கு பினாங்கில் மிக அழகான அறியப்படாத இடங்கள், நிலப்பரப்புகள், நகரங்கள் உள்ளன. சைக்கிளில் செல்லுதல் ஜார்ஜ்டவுனின் பாரம்பரிய கட்டடங்கள், புகழ்பெற்ற வீதி ஓவியங்களைக் காண்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். அத்துடன் பாலிக் புலாவில் கிராமங்கள், தோட்டங்கள், மீன்பிடி கிராமங்களின் அற்புதமான காட்சிகளையும் பார்க்கலாம். சுற்றுலாத் தலங்களில் இருந்து தள்ளி சிறிது நேரம் செலவழிக்க விரும்பும் துணிச்சலான பயணிகள், இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைப் பாதைகளில் ஸ்ட்ரெய்ட்ஸ் கீ அல்லது குயின்ஸ்பே-க்கு சைக்கிளில் செல்லலாம். நீங்கள் சாகசத்தில் ஈடுபடுபவர் என்றால், பிரதான நிலப்பகுதியின் சைக்கிள் ஓட்டும் பாதைகள் உங்களுக்காக உள்ளது. ஃபிராக் ஹில்லுக்குச் செல்வதற்கு முன், பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலையில் (பி.ஓ.ஓ.ஆர்) சவாரி செய்யுங்கள். மலையின் உச்சிக்குச் செல்வதற்குக் கரடுமுரடான பாதையிலும் ஒட்டு மொத்த நிலப்பரப்புகளின் வழியாகவும் செல்ல வேண்டும். ஒரு பைக்கை வாடகைக்கு எடுக்கவும், சைக்கிள் பயணத்தில் சேரவும் அல்லது LinkBike போன்ற பைக்-பகிர்வு முறையைப் பயன்படுத்தவும் – எந்த வழியில் சென்றாலும், நீங்கள் ஏராளமான உள்ளூர் மக்களைச் சந்திப்பீர்கள். நிதானமான வேகத்தில் சைக்கிள் ஓட்டும்போது பினாங்கின் பல்வேறு நிலப்பரப்புகளைக் காண்பீர்கள்.
.
பினாங்கின் கடற்கரைகளில் மீன்பிடித்து மகிழலாம். கணவாய், குருமுட்டி மீன்கள், பிளாக்ஃபின் எனப்படும் கடல் கெளுத்தி மீன்கள் பன்னா மீன்கள் கடற்கரையில் நிரம்பி வழிகிறது. பினாங்கு தீவைச் சுற்றியுள்ள கடலானது தூண்டில் போடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும். தீவைச் சுற்றியுள்ள பிடித்தமான மீன்பிடிப் பகுதிகளுக்கும் செபராங் பெராய் கடற்பகுதியில் உள்ள தீவுகளுக்கும் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் வாடகைப் படகுகளை எடுத்துச் செல்லலாம்.
பினாங்கில் 420 வகையான பறவைகள் உள்ளன, இதில் பல அரிய வகையைச் சேர்ந்த பறவை இனங்கள் உள்ளன. தீவு, நிலப்பரப்பு இரண்டுமே அதில் உள்ள ஏராளமான பறவை இனங்களுக்காக அறியப்படுகின்றன, இந்த இடமானது சிறந்த பொழுதுபோக்குத் தளமாகவும் பறவைகளை விரும்பும் பார்வையாளர்களுக்குச் சொர்க்கமாகவும் அமைகிறது. தாழ்நிலக் காடுகள், சதுப்புநிலக் காடுகள், அலை மண் சமதளங்கள், ஈரநிலங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவை பல்வேறு பறவைகளின் வாழ்விடங்கள் ஆகும். பினாங்கு முழுவதும் பொதுவாகக் காணப்படும் பறவைகளில் பல்வேறு வகையான கழுகுகள், ஆந்தைகள், பறவைகள், கரைப்பறவைகள், நீர்ப் பறவைகளும் அடங்கும்.
தீவு மற்றும் நிலப்பரப்பில் பறவைகள் பார்ப்பதற்கு சிறந்த இடங்கள்:
பத்து ஃபெரிங்கி, தஞ்சோங் பூங்கா கடற்கரைகளில் ஹோட்டல்கள், விடுதிகள், உணவருந்தும் இடங்கள் உள்ளன. பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு இங்கே பஞ்சமில்லை என்பதால் ஒருவர் படகில் செய்வதையோ அல்லது வாழைப்படகில் செல்வதையோ எளிதாகத் தேர்வுசெய்யலாம். பத்து ஃபெரிங்கியில் உள்ள நீர்நிலை வசதிகளை அணுகும் விருந்தினர்கள் தங்களது விருப்பத்திலே இந்தச் சாகசத்தைச் செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கயாக்கிங், டிராகன் படகு சவாரி செய்வதை விரும்புபவர்கள் தஞ்சோங் பூங்காவில் உள்ள பூசாட் கெகியாட்டன் சுக்கான் ஐர் (நீர் விளையாட்டு செயல்பாடுகளுக்கான மையம்)-க்குச் செல்லலாம். இந்த மையம் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், அங்கு டிராகன் படகு, கயாக்கிங் உட்பட பல்வேறு நீர் விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.