உணவுகள்

பல இன மக்களுடன் இணைந்து, பினாங்கு பல்வேறு வகையான உணவு வகைகளையும் பல்தரப்பட்ட சுவைகளில் வழங்குகிறது. ஆசியாவின் முக்கிய இனங்களின் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் பினாங்கின் உணவு வகைகளில் குறிப்பிடப்படுவது மட்டுமல்லாமல், ந்யோன்யா, ஜாவி பெரனாகன் போன்ற தனித்துவமான உணவுகளும் பினாங்கின் உணவு வகைகளில் இணைக்கப்பட்டுள்ளன. நியோன்யா உணவு என்பது மலாய், சீன, தாய்லாந்து உணவு வகைகளின் கலவையாகும். அதே சமயம் ஜாவி பெரனகன் உணவு என்பது இந்திய-முஸ்லிம், ஜெருசலம் வகை உணவு ஆகும். இது தமிழ், பாகிஸ்தான், பாரசீகம் & மலாய் சமையல் பாணிகளின் கலவையாக அமைகிறது. பாரம்பரிய ஹாக்கர் ஸ்டால்களில் இருந்து பழையமுறை காபி கடைகள் முதல் சிறந்த டைனிங் நிறுவனங்கள் வரை இங்கு உள்ளது. அதனடிப்படையில், சிறந்த உணவை எங்கே சாப்பிடுவது என்பதைத் தீர்மானிப்பதே இங்கு எழும் பெரும் குழப்பமாகும்.

சாலையோர உணவு

பினாங்கின் சாலை, வீதி உணவு மரபுகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பினாங்கில் உள்ள பெரும்பாலான சாலைகளில், தங்களது பாரம்பரியமான உணவு செய்முறையை பல தலைமுறைகளாகத் தொடர்ந்து செய்து வருவதாகப் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். காலப்போக்கில், பினாங்கின் சாலை, வீதி உணவு கலாசாரம் பல உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. பினாங்கின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சாலையோர உணவுகளான அஸ்ஸாம் லக்சா & சா ர்கோய் டியோவ், கறி மீ, ஹொக்கியென் மீ, பாசெம்பூர் போன்றவற்றை ஒரே இடத்தில் சாப்பிட இதுவே சிறந்த வழியாகும்.

    • நியூ லேன் ஹாக்கர் மையம்
    • கர்னி டிரைவ் ஹாக்கர் மையம்/span>
    • புலாவ் டிக்குஸ் ஹாக்கர் மையம்
    • லாங் பீச் ஃபுட் கோர்ட்
    • பெக் காங் செங் ஹாக்கர் பகுதி (மேலும் அறிவிப்பு வரும் வரை மறுசீரமைப்புக்காக மூடப்பட்டுள்ளது)
    • சாய் லெங் பார்க் உணவுக் கடைகள்

தனித்துவமான உணவு அருந்தும் அனுபவம்

பினாங்கில் எண்ணற்ற அற்புதமான உணவகங்கள் உள்ளன. இவற்றில் பாரம்பரிய உணவுகளுடன் சிறந்த உணவு அனுபவங்களைப் பெறுங்கள்.

ஹிப் கஃபேக்கள், பார்கள் மற்றும் பிஸ்ட்ரோக்கள்

நீங்கள் உள்ளூர், சுற்றுலாப் பயணி அல்லது வெளி மாநிலப் பார்வையாளர் என யாராக இருந்தாலும், பினாங்கின் கருப்பொருள் கொண்ட கஃபேக்கள், ஸ்வாங்கி பார்கள் போன்ற கேளிக்கை உண்வௌ மையங்களில் பலவகையான உணவுகள் விற்கப்படுகின்றன.

பெரனகன் உணவு வகைகள்

பல இன மக்களுடன் இணைந்து, பினாங்கு பல்வேறு வகையான உணவு வகைகளையும் பல்தரப்பட்ட சுவைகளில் வழங்குகிறது. ஆசியாவின் முக்கிய இனங்களின் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் பினாங்கின் உணவு வகைகளில் குறிப்பிடப்படுவது மட்டுமல்லாமல், ந்யோன்யா, ஜாவி பெரனாகன் போன்ற தனித்துவமான உணவுகளும் பினாங்கின் உணவு வகைகளில் இணைக்கப்பட்டுள்ளன. நியோன்யா உணவு என்பது மலாய், சீன, தாய்லாந்து உணவு வகைகளின் கலவையாகும்.

அதி நவீன உணவகங்கள்

பினாங்கு உயர்தர பாரம்பரிய சுவைகள் முதல் புதுமையான நவீன உணவு வரை சிறந்த உணவு விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது. எனவே பின்வரும் இடங்களில் பினாங்கின் சிறந்த உணவுகளை உண்டு மகிழுங்கள்.

ஹலால் மற்றும் முஸ்லிம்களுக்கு ஏற்ற உணவு

பினாங்கில் எப்போதுமே கிடைக்கின்ற மற்றும் முஸ்லிம்களுக்கான ஏற்ற உணவகங்களையும் சேர்த்து பலதரப்பட்ட உணவகங்கள் உள்ளன என்பதில் எந்த இரகசியமும் இல்லை.

சைவம்

சைவ உணவு உண்பவர்களுக்கு பினாங்கு ஒரு சிறந்த இடமாகும், ஏனெனில் பினாங்கில் சைவ உணவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உயர்தர சைவ உணவு உண்பவர்களுக்கும் ஏற்ற சீன & இந்திய சைவ உணவு விற்பனைக் கடைகள் ஏராளமாக உள்ளன.