கலாசாரம் & பாரம்பரியம்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தொலைதூர நாடுகளிலிருந்து வணிகர்களும் தொழிலாளர்களும் கப்பலேறி வந்து பினாங்கில் நங்கூரமிட்டு இறங்கி, வணிகம் செய்து தங்கள் செல்வத்தை ஈட்டினார்கள். அவர்கள் தங்களது சொந்த மொழிகள், பழக்கவழக்கங்கள் உட்பட மரபுகளையும் கொண்டு வந்தனர். இன்று, இம்மாநிலத்தில் காணப்படும் கிழக்கு, மேற்கு கலாசாரக் கலவையின் தாக்கங்கள், தீவிலும் நிலப்பகுதியிலும் காணப்படும் வெவ்வேறு வழிபாட்டுத் தலங்கள், கட்டடக்கலை ஆகியவை அவற்றுக்கான சான்றுகளாகத் தெளிவாகத் தெரிகிறது.

ஜார்ஜ் டவுன் யுனெஸ்கோ WHS

ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமானது, மலேசியாவின் சிறந்த மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய கட்டடக்கலையையும் பல பாரம்பரிய வர்த்தகங்களையும் கொண்டுள்ளது. பினாங்கை இருப்பிடமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களில் பிரதிபலிப்பாக “ஸ்ட்ரீட் ஆஃப் ஹார்மனி” திகழ்கிறது. ஜெட்டியில் உள்ள மர வீடுகள் கடலுக்கு மேல் தூண்களில் கட்டப்பட்டவையாகும். இவை ஜார்ஜ்டவுனின் கலாசாரம், பாரம்பரியம் மரபுகளைப் போற்றி பாதுகாக்கப்படும் விஷயமாகும். 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகப் பாரம்பரிய தலமான ஜார்ஜ்டவுனை, சைக்கிள், “ரிக்ஷா” வண்டி, அல்லது கால்நடையாகச் சென்று கூட காண முடியும்.

ஜார்ஜ் டவுனின் மிகச்சிறந்த உலகளாவிய மதிப்புகள் (ஓ.யு.விகள்)

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, இந்த நகரமானது தென்கிழக்கு ஆசியாவில் மலாய், சீன, இந்திய உட்பட ஐரோப்பியாவின் வணிகமும் நாகரிகப் பரிமாற்றங்களிலிருந்தும் உருவாக்கப்பட்ட நகரமாக விளங்குகிறது. பல்வேறு மதங்களும் கலாசாரங்களும் இணையும் இந்த நகரம் ஆசியாவின் பன்முகக் கலாசாரப் பாரம்பரியங்களுக்குச் சாட்சியாக உள்ளது. கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் எங்கும் இல்லாத தனித்துவமான கட்டடக்கலையும் கலாசார நகர அமைப்புகளையும் இந்த நகரம் பிரதிபலிக்கிறது.

பினாங்கு பெரனாகன் கலாசாரம்

ஆரம்பகாலத்தில் சீனாவிலிருந்து பாபா ந்யோன்யா அல்லது பெரனாகன் சீனர்கள் குடியேறினார்கள். அவர்கள் உள்ளூர் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக அவர்களுக்கு மட்டுமேயான தனித்துவமான கலாச்சாரம் உருவானது. மலேசியாவில் பினாங்கு & மலாக்காவில் உள்ள பெரனாகன் கலாசாரத்தை ஒருவர் காணலாம், ஆனால் பினாங்கு பெரனாகன்கள், தங்களது மலாக்கா சகாக்களிடமிருந்து சில வழிகளில் வேறுபடுகிறார்கள்.

இரு மாநிலப் பெரனாக்கன்களும் ஹொக்கியன் & மலாய் மொழிகளின் கலவையைப் பயன்படுத்தினாலும், பினாங்கு பெரனாக்கன்கள் முக்கியமாக சில மலாய் வார்த்தைகளைக் கலந்து ஹொக்கியன் மொழியைப் பேசுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, மலாக்கா பெரனாகன்கள் சில ஹொக்கியன் வார்த்தைகள் கலந்த மலாய் மொழியைப் பேசுகின்றனர்.

சீன & மலாய் கூறுகள் கலந்ததே பெரனாகன் பாணி சமையல். பினாங்கில் உள்ள பெரனாகன் உணவு வகைகளில் தாய்லாந்து உணவு வகைகளின் தாக்கம் கூடுதலாக உள்ளது, இது இனிப்பும் புளிப்பும் கலந்த கலவையாக உள்ளதால், மலாக்கா உணவு முறையிலிருந்து சற்று வேறுபட்டு உள்ளது. சடங்குகள், உணவு வகைகள், உடைகள் முதல் மொழி வரை, பெரானாகன் சீனர்கள் கலவையான கலாசாரங்களை உருவாக்கியுள்ளனர். அவை பினாங்கின் பன்முகக் கலாசாரத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றன.

 

நகரத்தின் சுற்றுலாத் தளங்கள்

ஜார்ஜ் டவுனில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியகங்கள் நகரத்தின் மிகவும் சக்திவாய்ந்த டிராக்களில் சில மற்றும் அவை அனைவருக்கும் ஏதாவது வழங்குகின்றன.

வரலாற்றுச் சிறப்புடைய தளங்கள்

ஒரு வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ள பினாங்கில், நன்கு பாதுகாக்கப்பட்ட காலனித்துவ கட்டிடக்கலை முதல் பாரம்பரிய குடியிருப்புகள் மற்றும் குல வீடுகள் வரை வரலாற்று தளங்கள் மற்றும் அடையாளங்கள் ஆகியவற்றிற்கு பஞ்சமே இல்லை.

வழிபாட்டுத் தலங்கள்

பினாங்கின் பன்முகத்தன்மை என்பது இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம், பௌத்தம் மற்றும் தாவோயிசம் ஆகியவை சமூகத்தில் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. பினாங்கில் பல மசூதிகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன, ஒன்று உங்கள் மதக் கடமைகளைச் செய்ய அல்லது மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரங்களைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற.