சொகுசுக்கப்பல் சுற்றுலா

2010 இல் செய்த ஒரு பெரிய புனரமைப்புக்குப் பிறகு, ‘ஸ்வெட்டன்ஹாம் பையர் சொகுசுக்கப்பல் முனையம்’ பினாங்கு துறைமுகத்தின் சமீபத்திய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு கூடுதல் சுற்றுலா இடமாகும். புதிய கப்பல் துறைமுகம் குவாண்டம்வகை சொகுசுக்கப்பல்கள் வந்து நிற்பதற்கு ஏதுவாக உள்ளது, பிரதானமான கப்பல் நிறுத்துமிடமானது (பெர்த்) பெரிய சொகுசுக் கப்பல்களைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. ராயல் கரீபியன் சொகுசுக் கப்பல்களின் குவாண்டம் ஆஃப் தி சீஸ்’ (Quantum of The Seas) மற்றும் ‘ஓவேஷன் ஆஃப் தி சீஸ்’ (Ovation of The Seas) மற்றும் சொகுசுக் கப்பலான குயின் எலிசபெத் (Queen Elizabeth) ஆகியவை துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்ட பெரிய சொகுசுக் கப்பல்கள் ஆகும்.

 

மேலும், கோஸ்டா குரோசியர் (Costa Crociere), பிரின்சஸ் (Princess) சொகுசுக்கப்பல் மற்றும் செலிபிரிட்டி (Celebrity) சொகுசுக்கப்பல் போன்ற மற்ற குறிப்பிடத்தக்க கப்பல் ஆபரேட்டர்களும் பினாங்கு துறைமுகத்திற்கு அடிக்கடி வருகிறார்கள். 2018 ஆம் ஆண்டின் இறுதியில், 341,000-க்கும் அதிகமான பயணிகளுடன் துறைமுகத்திற்கு வந்த மொத்த சர்வதேச சொகுசுக் கப்பல்களின் எண்ணிக்கை 176 ஆகும்.