பினாங்கு மருத்துவ சுற்றுலா (PMED)

தற்போது மலேசியா உலகின் தலைசிறந்த மருத்துவ வசதியை அளிக்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது. கட்டுபடியாகக்கூடிய செலவில், உயர்தர மருத்துவ வசதிகள் இருப்பதன் காரணமாக, இந்த மருத்துவ வசதியைப் பெறுவதற்குப் பல பயணிகள் பினாங்கை தங்களது விருப்பமான இடமாக தேர்வு செய்கிறார்கள்.

 

மலேசிய சுகாதார அமைச்சகமும், சுற்றுலா அமைச்சகமும் பினாங்கில் உள்ள மருத்துவச் சுற்றுலாவை உன்னிப்பாகக் கண்காணித்து, அங்கு வருகை தரும் நோயாளிகள் சிறந்த கவனிப்பைப் பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துகிறது.

 

பினாங்கில் உள்ள முன்னணி தனியார் சுகாதார நிறுவனங்களானது மலேசியன் சொசைட்டி ஃபார் குவாலிட்டி இன் ஹெல்த் (MSQH, Malaysian Society for Quality in Health)-இன் தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்றன. கூடுதலாக, பல மருத்துவமனைகள் தர மேலாண்மை அமைப்புகளுக்கு ISO 9001 அங்கீகாரமும், ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.

 

மேலும் தகவல்களுக்கு, pmed.my என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.