பினாங்குக்குச் செல்லுதல்

இணைப்பு

பொதுவாக, வெளிநாட்டுப் பயணிகள் செப்பாங்கில் இயங்கும் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் இருந்து பினாங்கை இணைக்கும் விமானங்களில் ஏறுகிறார்கள் – KLIA (கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்) & KLIA2 (கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2), & நகரத்தில் உள்ள மற்றொரு விமான நிலையம் – சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா. மலேசியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பினாங்குக்கு வருவதற்கு அதிக அளவில் உள்நாட்டு விமானங்கள் உள்ளன. கெடா (லங்காவி), ஜொகூர் (ஜொகூர் பாரு), சபா (கோத்தா கினாபாலு), கிளந்தான் (கோத்தா பாரு) & சரவாக் (கூச்சிங்) ஆகிய இடங்களிலிருந்து பார்வையாளர்கள் எளிதாகப் பினாங்குக்கு வர முடியும்.

 

பாயான் லெப்பஸில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த விரிவாக்கம் நான்கு அடுக்கு மாடிகளை உள்ளடக்கியது. சுமார் 48 முதல் 60 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த விரிவாக்கத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய விமான நிலைய மூலோபாயத் திட்டம் (NASP)-இலிருந்து உத்தரவு வரும் வரை இது நிலுவையில் உள்ளது. தேசிய போக்குவரத்துக் கொள்கையின்படி, விமான நிலைய மேம்பாடு குறித்து மேற்கொள்ளப்படும் NASP ஆய்வு 2023-இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6.5 மில்லியனிலிருந்து 25 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.