வாழ்க்கை முறை

பினாங்கில் ஷாப்பிங் செய்வது வாழ்க்கையின் சிறந்த அனுபவமாகும்! நீங்கள் நவீன பேரங்காடிகள், அல்லது பாரம்பரிய பஜார்கள், வீதி சந்தைகள் அனைவரும் விரும்பும் அளவிற்கான விற்பனைத் தளங்கள் உள்ளன.

பேரங்காடிகள்

ஷாப்பிங்கில் மிகுந்த ஆர்வம் உள்ள எவரையும் திருப்திப்படுத்த கூடிய வகையில் பினாங்கு பேரங்காடிகள் அமைந்துள்ளன.

கோம்தார்

நகரின் மையத்தில் பினாங்கின் புகழ்பெற்ற அடையாளமான கோம்தார் உள்ளது. பினாங்கின் அடையாளச் சின்னமான இந்தக் கட்டடம் பல நடுத்தர வகை உள்ளூர் விற்பனை கடைகளையும், மின்னியல் கடைகளையும் கொண்டவையாகும்.

1-ஆம் அவென்யூ மால்

கோம்தாரை 1-ஆவது அவென்யூ மாலுடன் இணைக்கும் ஒரு நடைபாதையும் உள்ளது, நவநாகரீக ஹை-ஸ்ட்ரீட் லேபிள்கள், கேளிக்கை மையங்கள், திரையரங்குகளுடன் கூடிய ஒரு புதிய பேரங்காடியாகும்.

கர்னி பிளாசா

மற்ற பிரபலமான ஷாப்பிங் இடங்களில் கர்னி பிளாசாவும் அடங்கும், இது கர்னி டிரைவில் உள்ள கர்னி பாராகனிலிருந்து மிக அருகில் உள்ளது.

கர்னி பாராகான்

மற்ற பிரபலமான ஷாப்பிங் இடங்களில் கர்னி பாராகனும் அடங்கும், இது கர்னி டிரைவில் உள்ள கர்னி பிளாசாவிலிருந்து மிக அருகில் உள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் கீ

ஸ்ட்ரெய்ட்ஸ் கீ என்பது முன்புறத்தில் கடற்கரை வெளியைக் கொண்டுள்ள ஓர் உயர்தர மால் ஆகும். இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்கள் வெளியே சென்று கடல் காற்றை அனுபவிக்கவும், படகுத் துறைமுகத்தில் உள்ள ஆடம்பரப் படகுகளைக் கண்டு வியக்கவும் செல்லலாம். வார இறுதி நாட்களில் இங்கு பயிலரங்குகள், போட்டிகள், வார இறுதி சந்தைகளும் நடத்தப்படும்.

குயின்ஸ்பே மால்

குயின்ஸ்பே மால் பினாங்கில் முக்கியத்துவதுவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள பேரங்காடி ஆகும், இது 500-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட, பினாங்கின் மிகப்பெரிய பேரங்காடியாகக் கருதப்படுகிறது. பினாங்கு பாலம் & பினாங்கின் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த பேரங்காடி, பினாங்கைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கும் ஒருவரின் பயணத்திற்கு சிறந்த தேர்வாக அமையும்.

கோம்ப்ளெக்ஸ் புக்கிட் ஜம்புல்

கோம்ப்ளெக்ஸ் புக்கிட் ஜம்புல், பாயான் பாருவில் அமைந்துள்ளது. விடுதிகள், அலுவலகக் கட்டடங்கள் அனைத்துலகக் கல்லூரிகள் இந்த பேரங்காடியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்தப் பேரங்காடி பினாங்கு பாலம், பினாங்கு இரண்டாம் பாலம் & பினாங்கு அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றிலிருந்து சிறிது தூர இடைவெளியில் அமைந்துள்ளது. சிறந்த கைப்பேசி விற்பனைகளுக்குப் பெயர் பெற்ற இடமாகவும் விளங்குகிறது.

டிசைன் வில்லேஜ்

பினாங்கில் உள்ள முதல் அவுட்லெட் பேரங்காடியாகவும் மலேசியாவில் மிகப்பெரிய பேரங்காடியாகவும் அமைந்துள்ளது டிசைன் வில்லேஜ். இந்தப் பேரங்காடியில் எப்போதும் தள்ளுபடி விற்பனைகள் இருக்கும். இங்குக் குறைந்த விலையில் உயர்தர ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம்.

ஐ.கே.இ.ஏ (IKEA)

வடக்கு மாநிலத்தில் முதல் IKEA கிளையாக, பத்து கவானில் உள்ள பண்டார் காசியாவில் அமைந்துள்ளது. 470,000 சதுர அடி (43,600 சதுர மீட்டர்) வணிக இடம், சுமார் 49 காட்சியறைகள், சந்தை, பேக்கரி என சுமார் 756 பேர் வரையில் அமரக்கூடிய உணவகம் ஆகியவற்றுடன் 8,000க்கும் மேற்பட்ட நன்கு வடிவமைக்கப்பட்ட, வாங்கக்கூடிய விலையில் சுவீடன் வீட்டு அலங்காரப் பொருள்கள் இங்கு விற்பனையில் உள்ளன. மரத்திலான தளவாடப் பொருள்கள், உள் வடிவமைப்புகள் போன்றவற்றைக் காணவும் ஏற்ற இடமாகும்.

சன்வே கார்னிவல்

சன்வே கார்னிவல் மால் மிகவும் கவர்ச்சிகரமான 4-அடுக்குமாடிகள் கொண்ட பேரங்காடி ஆகும். இது செபராங் ஜெயாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. பினாங்கின் பிரதான சில்லறை விற்பனைக் கடைகளைக் கொண்ட பேரங்காடியாகவும் இது திகழ்கிறது. எட்டுத் திரைகள் கொண்ட திரையரங்குகளும், பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய மிகப் பெரிய திரையரங்கமும் இதில் உண்டு. 2007 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த பேரங்காடியில் அனைத்துலக & உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்களின் நேர்த்தியான உணவுக் கடைகள், பொழுதுபோக்குப் பொருட்களுக்கான கடைகளும் உள்ளன. சன்வே கார்னிவல் பேரங்காடியில் சுமார் 220 கடைகளும் ஒரு மாநாட்டு மையமும் உள்ளது. 13 திரைகள் கொண்ட GSC சினிமா அரங்கு, Jeya Grocer, JD Sports, Bath & Body Works, Innisfree, Laneige, Victoria Secret போன்ற புகழ்பெற்ற கடைகளும் இங்கு உண்டு.

பாரம்பரிய மற்றும் நவீன உள்ளூர் கைவினைஞர்கள்

பாரம்பரிய கலைகள் & கைவினைப்பொருட்கள் என கையால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்யும் ஏராளமான கடைகளும் சந்தைகளும் பினாங்கு மாநிலம் முழுவதும் நீங்கள் காணலாம். உங்கள் விருப்பம் எவ்வாறாயினும் உங்களை கவரும் வகையில் இங்குள்ள கைவினை கலைஞர்கள் திறன் பெற்றவர்கள் ஆவர்.

பினாங்கு தயாரிப்புகள்

பினாங்கில் உள்ள பாரம்பரிய உணவுகள் முதல் பானங்கள் வரை அனைத்தும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களாகும். பினாங்கில் இருந்து வாங்கி வருவதற்கான நினைவுப் பொருட்கள் இங்கே அதிகம் கிடைக்கின்றன.

கீ ஹியாங்

கீ ஹியாங் ஒரு பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டதாகும். 1856-ஆம் ஆண்டு பினாங்குக்கு ஒரு Fuji நாட்டு அணிச்சல் நிபுணர் வருகையின்போது இது நிறுவப்பட்டது. கீ ஹியாங்கின் நிறுவனர் அந்த அணிச்சல் நிபுணரை வரவழைத்தார். அவர் பினாங்கில் பாரம்பரிய அணிச்சல், ரொட்டிகளை தயாரிப்பதை அறிமுகப்படுத்தினார். 1900-களிலிலிருந்து, இந்த நிறுவனம் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. பாரம்பரிய பிஸ்கட், ரொட்டி வகைகள், பானங்கள் நல்லெண்ணெய் ஆகியவற்றிற்குப் பிரசித்திப் பெற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது.

எஸ்.எம். பேட்ஜெனிட் & சன்

கடந்த 1917-ஆம் ஆண்டு ஜார்ஜ்டவுனில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தில், மொத்த விற்பனை பொருள்கள், வாசனைத் திரவியக் கலவைகள், நறுமண எண்ணெய்கள், பூஜை பொருள்களின் சில்லறை விற்பனை போன்றவற்றிற்குப் பிரசித்திப் பெற்றதாகும். இப்போது மூன்றாம் தலைமுறை குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் இந்தக் கடையில் ஆயிரக்கணக்கான ஹலால் முத்திரை பதித்த வாசனை திரவியங்களும் விற்கப்படுகின்றன.

ஆப்பிள் பிராண்ட் சோயா சாஸ்

Sin Heng Lee Food Industries Sdn Bhd நிறுவனத்தின் Apple brand சோயா சாஸ் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீங்கள் சமைக்கும் உணவுகளின் சுவையை உறுதி செய்வதற்காகத் துல்லியமாகத் தயார் செய்யப்படுகிறது.

ஹிம் ஹெயாங்

ஹிம் ஹெயாங், ஒரு குடும்ப நிறுவனமாகும். இதன் உரிமையாளர் பினாங்கில் புகழ் பெற்ற ரொட்டி விற்பனையின் உற்பத்தியாளராவார். அங்கு கிடைக்கும் Tau Sar Peah (ஒரு வட்ட வடிவ சீன ரொட்டி)-க்கு, அந்தக் கடை புகழ் பெற்றது. 1948 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒருவரால் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இப்போது மூன்றாம் தலைமுறை உரிமையாளரால் நடத்தப்படுகிறது. ஹிம் ஹெயாங் பல்வேறு வகையான உள்ளூர் ரொட்டி / பிஸ்கட்களை வழங்குகிறது.

கீ ஹப் ஜாதிக்காய் தயாரிப்புகள்

உங்களுக்கு ஜாதிக்காய் பிடிக்குமா? கீ ஹப் ஜாதிக்காய் தொழிற்சாலைக்குச் செல்லுங்கள்! ஜாதிக்காயில் செய்யப்பட்ட ஊறுகாய், மிட்டாய், ஜாம், பழச்சாறு, ஜாதிக்காய் தைலம் என பல தயாரிப்புகளை நீங்கள் அந்தக் கடையில் காணலாம். தொழிற்சாலையாகவும் செயல்படும் இக்கடையில், ஜாதிக்காயை உருவாக்கும் செயல்முறை, ஜாதிக்காயின் ஊட்டச்சத்து மதிப்பும் அதன் பயன்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

லீன் செங் கூலிங் ஃபேஸ் பவுடர்

அரிசி என்பது உணவு மட்டுமல்ல; இது முகத்தை குளுமையாக வைத்துக் கொள்ளும் பவுடர் (Bedak Sejuk) எனப்படும் பாரம்பரிய அழகு சாதனப் பொருளைத் தயாரிக்கப் பயன்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கவும், சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும், அரிப்புகளை போக்கவும் உதவும் என நம்பப்படுகிறது. Lean Seng Cooling Face Powder கடையில் நீங்கள் Face powder-ஐ வாங்கலாம்.

ஜெருக் மடு பாக் அலி

Jeruk Madu Pak Ali, பினாங்கில் உள்ள ஒரு முன்னணி Jeruk (பழ ஊறுகாய்) ஆகும். இந்த ஊறுகாய் அதன் சுவைக்கும் நறுமணத்திற்கும் பெயர் பெற்றது. இது தரமான புதிய பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. Jakim நிறுவனத்தால் தரப்படும் Halal சான்றிதழையும் இது பெற்றுள்ளது.

மைகுவாலி (MyKuali) “பினாங்கு வெள்ளை கறி” துரித மீ

துரித மீ விற்பனையில் நம்பகத்தனமான முத்திரை MyKuali ஆகும்.Loas Angeles Times’இன், “சிறந்த சுவையான துரித ராமன் 2019” பட்டியலில் MyKuali பினாங்கு வெள்ளை கறி இரண்டாம் இடத்திலும், பினாங்கின் காரமான இறால் ஏழாம் இடத்திலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சல்யூட் பிராண்ட்” லோக்கல் காபி

மாலுமி முத்திரையிலான “சல்யூட் பிராண்ட்” காப்பி & தேயிலைத் தூள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பிரசித்திப்பெற்ற முத்திரையாகத் திகழ்கிறது. இந்தக் காப்பி, பால் கலவை, சீனி என மக்களின் ரசணைக்கேற்ப பல அம்சங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இரவுச் சந்தைகள்

பசார் மாலாம்” அல்லது இரவுச் சந்தைகள் அருகிலுள்ள சம்மந்தப்பட்ட பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாரந்தோறும் செயல்படும் சந்தையாகும். வீதியோர வியாபாரிகள் வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் மாலை 6.30 மணியளவில் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். பொதுவாக மக்கள் அதிகமாக உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கடைகளை அமைக்கின்றனர். உமிழ்நீர் சுரக்கும் சாலையோர உணவுகளுக்கு அடுத்தபடியாக அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் அனைத்தும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. உள்ளூர் உணவின் மாதிரியை சுவைப்பதற்கும், பேரம் பேசும் பொருள்களை வாங்கவும் இரவு சந்தை சரியான தேர்வாக அமைகிறது.

ஒரு நாளைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

திங்கள்கிழமை – மெக்கல்லம் ஸ்ட்ரீட் காட் மற்றும் பெராபிட் புக்கிட் மெர்தாஜாம்

செவ்வாய்கிழமை – தஞ்சுங் புங்கா

புதன்கிழமை – ஃபார்லிம்

வியாழக்கிழமை – பத்து பெரிங்கி, பத்து கவான் அரங்கு கார் நிறுத்துமிடம், ஜாலான் மஹ்சூரி, பாயான் பாரு

வெள்ளிக்கிழமை – ஜெலுடாங்

சனிக்கிழமை – சுங்கை டுவா

ஞாயிற்றுக்கிழமை – பாயா தெருபோங் & அல்மா புக்கிட் மெர்தாஜாம்

தினசரி – பட்டு ஃபெரிங்கி

கலைக் கூடங்கள் & கலைப்பொருள் காட்சியகங்கள்

பினாங்கு வீதி ஓவியங்களுக்குப் புகழ் பெற்றிருந்தாலும், மாநிலத்தின் ஓவியக் காட்சிகள் அதைவிட அதிகம் உள்ளது. பல காட்சிக்கூடங்களுக்குச் சென்று, பினாங்கின் வளர்ச்சியைக் காட்சிகளாகக் கண்டு களியுங்கள்.