வீதி ஓவியங்கள்

வீதி ஓவியங்கள்

வீதி ஓவியங்கள் உலகப் பயணிகள், கலைஞர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இது நகரத்தின் பலவகையான கலாசாரங்கள், பாரம்பரியம், கலைகள் ஆகியவற்றின் கலவையுடன் பயணிகளை ஆக்கப்பூர்வமாக இணைக்கும் ஒரு புதிய வகையான சுற்றுலா உத்தியாகும். இந்த வீதி ஓவியங்களின் வழி கலை வளர்க்கப்படுகிறது. ஓவியங்கள் இனி அருங்காட்சியகங்கள் அல்லது காட்சிக் கூடங்களில் அடைத்து வைக்கப்படுவதில்லை. இன்று, நகரின் ஐந்தடி வழிகளிலும், உலகப்போருக்கு முந்தைய காலத்துக் கடைவீதிகளிலும் வீதி ஓவியங்கள் செழித்து வளர்வதைக் காணலாம். இது பார்வையாளர்களுக்கு, மாநிலத்தின் வரலாற்றையும் கலாசார பாரம்பரியத்தைப் பற்றிய பார்வையையும் மேலோங்கச் செய்கிறது. பாரம்பரிய நகரமான ஜார்ஜ்டவுனின் வீதி ஓவியங்கள் அனைத்தும் பார்க்கக்கூடியவையாக இருக்கலாம், ஆனால் பாலிக் பூலாவ், ஆயேர் ஈத்தாம், பட்டர்வொர்த், புக்கிட் தம்புன் ஆகியவற்றில் உள்ள மற்ற சுவரோவியங்கள் இரசிக்கக் கூடிவை.