ஏப்ரல் – ஜூன்

பினாங்கு சர்வதேச உணவுத் திருவிழா (பி.ஐ.எஃப்.எஃப்), இது பார்வையாளர்களுக்கு பினாங்கின் புகழ்பெற்ற உணவுகளை சுவைப்பதற்கான ஓர் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. எண்ணற்ற விருப்பமான உணவுத்தேர்வுகளை வழங்குவது, பி.ஐ.எஃப்.எஃப் திருவிழா உணவு, கதைகள், அனுபவம், கலாச்சாரம் மற்றும் மரபுகளை அறிந்துகொள்ளும் ஓர் இடமாகும்....

புத்தரின் பிறந்த நாள், ஞானம் மற்றும் நிர்வாண சாதனையைக் கொண்டாடுவதற்காக வெசாக் தினம் பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தைப் பக்தர்கள் கோவில்களில் பிரார்த்தனையுடன் அனுசரிக்கின்றனர்....

மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஷவால் மாதத்தின் தொடக்கத்தை தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகிறார்கள். இது ரமலான் மாதத்தில் ஒரு மாத நோன்பின் முடிவைக் குறிக்கிறது....

புனித ரமலான் மாதத்தின் 17 ஆம் நாளில், நபிகள் முஹம்மது S.A.W அவர்கள் முதன்முதலில் இறைவன் இறக்கி அருளிய அல் குர்ஆன் வசனங்களைப் பெற்றதை நினைவுகூரும் வகையில் நுசுல் அல்-குர்ஆன் என்று அழைக்கப்படும் தேசிய அளவிலான கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இது பொது விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது....

வைசாகி அறுவடை திருவிழா மற்றும் பஞ்சாப் மக்களின் புத்தாண்டுத் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தத் தினத்தை சீக்கிய சமூகத்தினர் சீக்கிய கோவில்களில் பிரார்த்தனையுடன் அனுசரிக்கின்றனர்....

முஸ்லீம்களின் நோன்பு மாதத்தில், மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு மாலை ரமலான் பஜார்களில் ஏராளமான உணவுகள், உள்ளூர் உணவுகள், பண்டிகை குக்கீகள், ஆடைகள் மற்றும் மதம் சார்ந்த பொருட்கள் ஆகியவை விற்கப்படுகின்றன....

சோங்க்ரான் அல்லது நீர் திருவிழா என்பது தாய்லாந்து மற்றும் பர்மிய பக்தர்களால் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிப்பதற்குக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியமான திருவிழாவாகும். ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடப்படுகிறது....