வழிபாட்டுத் ஸ்தலங்கள்

ஒன்பது பேரரசர் கடவுள்கள் கோயில் பட்டர்வொர்த்தில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இது தாவோயிஸ்டு மதத்தின் ஒன்பது பேரரசர் கடவுள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது பல ஆண்டுகளாக பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு ஒரு வாடகை நிலத்தில் இந்த ஆலயம் தொடங்கப்பட்டது. பிரமாண்டமான கட்டிடக்கலையுடன் உள்ள தற்போதைய...

கு ஜெங் சே கோயில் என்பது செபராங் ஜெயாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புத்தர் கோவிலாகும். இந்தக் கோவிலின் பிரமாண்டமான கட்டிடக்கலையானது மத்திய தாய் கோயிலின் உருவத்தை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோவிலில் கடவுளுக்கு நன்கொடை செலுத்தும் டேப்லெட்களுடன் கூடிய ஒரு பந்தலும், பக்தர்கள் தரிசனம் செய்ய ஒரு பெரிய சன்னதி...

பினாங்கு பறவை பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோவிலானது ஒரு தென்னிந்திய இந்துக் கோவில் ஆகும். இது 1997 இல் கட்டப்பட்டது, இது மலேசியாவின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான பிரதான சிற்பக் கோபுரத்தைக் (ராஜகோபுரம்) கொண்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உயரம் 72 அடி ஆகும்....

ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் 1870 களில் நிறுவப்பட்ட மலேசியாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். புதிதாக வாங்கப்பட்ட கார்களை ஆசீர்வதிப்பதற்காக இந்தக் கோயில் பிரபலமானது, மேலும் இந்துக்கள் அல்லாத பலரும் தங்கள் கார்களை பூசாரியிடம் ஆசி பெற எடுத்து வருகிறார்கள்....

சுராவ் குபாங் செமாங் செபராங் பெராய்யின் மத்திய மண்டலத்தில் அமைந்துள்ளது. சுராவின் வடிவமைப்பு பாரம்பரிய மலாய் வீட்டை ஒத்திருக்கிறது. ரமலான் (முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் மாதம்) இரவு தராவிஹ் தொழுகைக்கு மட்டுமே சுராவ் பயன்படுத்தப்படுகிறது....

முன்னாள் பிரதம மந்திரி துன் அப்துல்லா அகமது படாவியின் தாத்தாவின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லா ஃபாஹிம், கெப்பாலா பட்டாஸில் உள்ள மிகப்பெரிய மசூதியாகும். பிரமிக்க வைக்கும் பாரசீக நீல நிற மினாரட் மற்றும் குவிமாடங்களுடன், இந்த கட்டிடக்கலையின் அழகு நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று...

நிபோங் டெபாலில் உள்ள இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயம் 1891 ஆம் ஆண்டில் ஒரு கத்தோலிக்க மிஷனரியிலிருந்த "ஃபாதர் ரெனே மைக்கேல் மேரி ஃபீ"என்பவரால் நிறுவப்பட்டது. இந்தத் தேவாலயம் இத்தாலியின் படுவா புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பினாங்கில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்....

1833 ஆம் ஆண்டு பட்டு கவானிலிருந்து சீன மற்றும் இந்திய கத்தோலிக்கர்கள் புக்கிட் மெர்தாஜாமின் அடிவாரத்தில் குடியேறியதிலிருந்து செயின்ட் ஆன் மைனர் பசிலிக்கா உள்ளது. இந்த மக்கள் விவசாயத்திற்காக நிலத்தைச் சீரமைக்க வந்த விவசாயிகள். 1840 - 1860 ஆண்டிற்கு இடையில் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள மலையின் உச்சியில்...

மேற்கத்திய நவீனத்துவ மற்றும் மலாய் கட்டிடக்கலை வடிவமைப்புகளைக் கொண்ட இந்த அழகான மசூதி 1970களில் கட்டப்பட்டது. அதன் உயரமான மினாரட் மற்றும் ஒரு பெரிய மையக் குவிமாடத்துடன் உள்ள இந்த மசூதி தீவின் மிகவும் அடையாளம் காணக்கூடிய இடங்களில் ஒன்றாகும்....

கெக் லோக் சி கோயில் என்பது தீவிலே மிகவும் பிரபலமான கோயிலாகும், மேலும் இது 1890 இல் கட்டப்பட்டது. இக்கோயில் பிரார்த்தனைக் கூடங்கள், பகோடாக்கள் மற்றும் மணிக் கோபுரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது....